சென்னை கொருக்குப் பேட்டையில் 50 ஆண்டுகால பழமையான கட்டடத்தை இடிக்கும் போது தளம் இடிந்து தொழிலாளர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இந்த வீடு வாங்கிய பலராமன் இரண்டு ஆண்டு காலம் ஆகியும் அங்கு புதிய வீடு கட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே, அந்த பழமையான வீடு இடியும் தருவாயும் இருந்ததால் அச்சத்தில் இருந்த அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சிக்கு புகார் அளித்தனர்.
கர்ப்பிணிகள் ஒன்பதாவது மாதத்தில் என்ன சாப்பிட வேண்டும்?
அந்த புகாரின் பேரில் சென்னை மாநகராட்சி, அந்த வீட்டை 15 நாட்களுக்குள் இடிக்க வேண்டும் என்று பலராமனுக்கு உத்தர விட்டது.
இதனால், பலராமன் திருவண்ணாமலையைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை அழைத்து கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதில் 2 தொழிலாளர்கள் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தளம் இடிந்து அந்த கட்டடத்தில் சிக்கினர்.
இதில் சின்னதம்பி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, அங்கு இடிபாடுகளில் சிக்கிய மற்றொரு தொழிலாளியான சுரேஷ் என்பவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
1-3 வயது வரையிலான குழந்தைகளை வளர்ப்பது எப்படி?
மேலும், அங்கு வேலை செய்து கொண்டிருந்த மேஸ்திரி ஒருவர் தலைமறைவாகி யுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Thanks for Your Comments