நேற்று இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக உலகக்கோப்பை தொடரில் 243 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று இருக்கிறது.
எனவே இந்திய அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடிக்கும் அணியுடன் அரையிறுதி போட்டியில் மோதும்.
தோலில் இந்த மாதிரி மாற்றம் இருந்தால் கொரோனாவாக இருக்கலாம் !
இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக அரையிறுதியில் மோதும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருக்காது.
மேலும் இந்திய அணி இதுவரை 8 லீக் போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளையும் வென்று இருக்கிறது. இதில் 5 போட்டிகளில் இரண்டாவதாக பேட் செய்தும், மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தும் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்திய அணிக்கு பொதுவாக பேட்டிங் சிறப்பாக இருக்கும். இந்த முறை பந்து வீச்சும் சிறப்பாக இருப்பது பெரிய பலமாக மாறி இருக்கிறது. இதனால் இந்திய அணி ஒரு போட்டியும் தோற்காமல் உலகக் கோப்பையை கைப்பற்றுமா? என்று ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து பேசிய அவர் கூறும் பொழுது நாங்கள் ஒவ்வொரு போட்டி பற்றிதான் யோசித்து வருகிறோம். அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை.
வரவிருக்கும் நாக் அவுட் போட்டிகள் மிகவும் முக்கியமானது. இந்த அணி மூன்று துறைகளிலும் நன்றாக செயல்பட்டு வருகிறது.
நாங்கள் இதுவரை ஒருதலைப் பட்சமாகவே வெல்கிறோம் ஏன் கடினமான போட்டியை சந்திக்கவில்லை என்று கேட்கிறீர்கள். அப்படி எந்த கடினமான போட்டியையும் சந்திக்காதது நல்ல விஷயம் தான்.
உணவுக்குழாய் புற்று நோய்க்கான காரணம் என்ன?
நாம் தொடர்ச்சியாக மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் எதிரணிகள் பீதி அடையும். அப்படி அவர்கள் நம்மோடு மோதும் பொழுது பீதி அடைந்தால் அதிகபட்ச அழுத்தத்திற்கு செல்வார்கள்.
இதுதான் நமக்கு தேவையான ஒன்று! என்று கூறி இருக்கிறார்.
Thanks for Your Comments