விஷம் வைத்துக் கொல்லும் அளவுக்கு சாக்ரடீஸ் செய்தது என்ன?

0

அவர் செய்த குற்றம் ஒன்றே. அவர் வாழ்ந்த அன்றைய காலத்தில் அவர் அரசியல் தத்துவங்களும் கருத்துகளும் மிகவும் புரட்சிகரமானதாக இருந்தன. அன்றைய இளைஞர்கள் அவரை பின்பற்றி எப்போதும் சூழ்ந்து இருந்தனர்.

விஷம் வைத்துக் கொல்லும் அளவுக்கு சாக்ரடீஸ் செய்தது என்ன?
அவர் மீதான மிக முக்கியமான குற்றச்சாட்டுகள் இரண்டே. ஒன்று அன்றைய கிரேக்க நாட்டில் வழிபடப் பட்ட தெய்வங்களை அவர் ஏற்கவில்லை என்பது, மற்றொன்று அவர் புதிய கடவுள்களை அறிமுகப் படுத்தினார் என்பது.

கிமு 470ல் ஏதன்ஸ் நாட்டில் பிறந்த அவர் அவரது71ம் வயதில் (கிமு 399ல்) சட்டத்துக்கு பணிந்து, மரண தண்டனையை மறுக்காது மலர்ந்த முகத்துடன் ஏற்றார்.

அவருடைய விசாரணை சுமார் 500 உறுப்பினர்கள் கொண்ட சபையில் நடந்தது. அப்போது அவர் தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கான நூறு தங்கக் காசுகளை அபராதமாக கட்ட முன்வந்தார். 

(getCard) #type=(post) #title=(You might Like)

அதை சபை ஏற்காததால் அவருடைய சீடரான ப்ளாட்டோ 3000 தங்கக் காசுகளாக உயர்த்திக் கூறினார். சபை அதையும் ஏற்கவில்லை.

அந்த நேரத்திலும் தன் நகைச்சுவை கலந்த கிண்டலாக சாக்ரடீஸ் அவருக்கு தண்டனையாக தெய்வ பிரசாதத்தை உண்ணச் சொல்லலாம் என்றார். அந்தப் பெருமை வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட அக்காலத்து கௌரவம்.

இறுதியில் சபை அளித்த மரண தண்டனையை ஏற்று, ஹெம்லாக் என்ற விஷம் கலந்த மதுபானத்தை அருந்தி சாக்ரடீஸ் உயிர் நீத்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings