ஒரு இஞ்சின் பழுதாகி, மற்றொரு இஞ்சின் உதவியோடு பறக்கும் பொழுது, விமானம் ஒரு பக்கமாக இழுக்கப்படாதா?
விமானம் பறக்கும் பொழுது ஒரு எஞ்சின் பழுதாகி விட்டால் விமானம் ஒரு பக்கமாக கண்டிப்பாக இழுக்கப்படும்.
நவீன விமானங்களில் இதற்கென்றே ஒரு கணினி (yaw damper) உள்ளது.
அது உடனே சூக்கானை திருப்பி சமன் செய்யும்.
ஆதலால் விமானிக்கு இதைப் பற்றி கவலைப் பட தேவையில்லை.
விமானம் தரையில் இருந்து மேலே எழும்பும் போது ஒரு இன்ஜின் பழுதானால் அதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும்.
ஆனாலும் கணினி உடனடியாக சமன் செய்து விடும்.
விமானம் வாங்கி எடுத்து வரும் போது பல சோதனைகள் செய்யப்படும்.
அதில் ஒன்று விமானம் மேலே எழும் போது வேண்டும் என்றே ஒரு இயந்திரத்தின் சக்தியை தீடீரென குறைத்து சோதனை செய்யப்படும்.
Thanks for Your Comments