கூகுள் பே மூலம் லோன் பெறலாம்.. எவ்வளவு பணம் அனுப்பலாம்?

0

கூகுள் பே இனிமேல் பணம் மட்டும் அனுப்ப முடியாது. கடனாக 15,000 வரை இனி கூகுள் பேயில் பெற முடியும்.  அதுவும் கடை வைத்திருப் பவர்களுக்கு மட்டும் அதில் கூகுள் பே பார் கோடு வைத்திருக்க வேண்டும் என்பது முக்கிய அம்சம்.

கூகுள் பே மூலம் லோன் பெறலாம்.. எவ்வளவு பணம் அனுப்பலாம்?
இந்த தொகையை வணிகர்கள் தங்களுக்கு தேவையான சரக்குகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது.

இதே போல் கூகுள் நிறுவனம் ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளுடன் இணைந்து தங்கள் பயனர்களுக்கு தனிநபர் கடன்களையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன தீர்வு !

உலக அளவில் யுபிஐ பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக ஜிபே எனப்படும் கூகுள் பே யுபிஐ தான் இதில் முன்னனியில் இருக்கிறது.

கடந்த 12 மாதங்களில் UPI மூலம் சுமார் 167 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொகை நிதி பரிமாற்றம் செய்யப் பட்டதாக கூகுள் பே பிரிவின் துணைத் தலைவர் அம்பரீஷ் கெங்கே கூறியுள்ளார். 

இத்தகைய கடன் சேவைகளை வழங்க கூகுள் நிறுவனம் DMI ஃபைனான்ஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. சிறு வணிகர்கள் தங்கள் வர்த்தகத்திற்கு தேவையான செயல்பாட்டு மூலதன தேவைகளைத் தீர்க்க உதவும். 

ePayLater உடன் இணைந்து வணிகர்களுக்கான கடனை Google Pay வாயிலாக செயல்படுத்த உள்ளது. யுபிஐ செயலியை எளிதாக பயன்படுத்தும் வகையில் மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் இந்த செயலியை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது கூகுள் நிறுவனம்.

இந்நிலையில் ஜிபே பயனர்களுக்கு உதவும் நோக்கில் ஒரு புதிய கடன் வசதியை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

இந்தியாவில் உள்ள சிறு வர்த்தகங்கள், நிறுவனங்கள், வணிகர்களுக்கு உதவும் வகையில் Google Pay செயலி மூலம் சாசெட் கடன்களை (sachet loans) அதாவது மிகவும் சிறிய அளவிலான தொகை கொண்ட கடன்களை கூகுள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதற்காக கூகுள் தனது GPAY மூலம் அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் சாச்செட் கடன்கள். கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு வணிக முதலாளிகளுக்கு 15,000 ரூபாய் மதிப்பிலான தொகையை sachet loans என்ற சிறு கடனாக வழங்க உள்ளது.

ஸ்லீப்பர் க்ளட்சும், அது இயங்கும் விதமும் !
இந்த கடன் வாங்கியவர்கள் இத்தொகையை வெறும் 111 ரூபாய் மாத வட்டியுடன் 12 மாதங்ள் வரை திருப்பிச் செலுத்தலாம்.

இந்தியாவில் உள்ள வணிகர்களுக்கு பெரும்பாலும் சிறிய கடன்கள் அடிக்கடி தேவைப்படும், இதற்கு வங்கிகளில் ஒவ்வொரு முறையும் கடன் பெற முடியாது.

இதே போல் நண்பர்களிடம் ஒவ்வொரு முறையும் கேட்க முடியாது. இந்த இடைவெளியை பயன்படுத்தி கொள்ள கூகுள் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் வணிக தேவை ஓரளவு பூர்த்தி செய்து கொள்ளலாம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings