பெண்கள் வீலிங் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழக இளைஞர்கள் மத்தியில் வீலிங் என்ற பெயரில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பைக் சாகசங்கள் மேற்கொள்வோர் அதிகரித்து வருகின்றனர்.
டிடிஎஃப் வாசன் முதல் திருச்சியில் சாகச தீபாவளி கொண்டாடிய இளைஞர்கள் வரை, பலரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎஃப் வாசன், பிணையில் வெளிவந்து அடக்கி வாசிக்கிறார். அவரை தொடர்ந்து பைக் சாகச இளைஞர்கள் பலரும் வீலிங் கனவுகளை கனத்த இதயத்துடன் கலைத்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பதிவிட்ட தங்களது பைக் சாகச வீடியோக்களை, போலீஸார் பார்வையில் படும் முன்னர் நீக்கி வருகின்றனர்.
இந்நிலையில் பெண்கள் சிலர் அதிநவீன பைக்குகளை ஆரோகணித்து, சாகசங்கள் மேற்கொள்வதை கண்டு கொதிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
அந்தப் பதிவுகளில் ஆஜராகி, தங்கள் வீலிங் கனவுகள் கலைக்கப்பட்டது குறித்தும், அதனை பெண்கள் மட்டும் செயல்படுத்துவது குறித்தும் இளைஞர்கள் தங்கள் ஆதங்கங்களை பதிவு செய்து வருகின்றனர்.
'சட்டம் தனது கடமையை செய்யுமா அல்லது கரிசனம் காட்டுமா', 'பெண் என்பதால் எச்சரிக்கையோடு விட்டு விடுவார்கள்.
இதுவே ஆண்கள் என்றால் ஓட்டுநர் உரிமத்தை பறித்து சிறையில் தள்ளுவார்கள். வாகனத்தை எரிக்கச் சொல்வார்கள்' என்றெல்லாம் பொங்கி வருகின்றனர்.
சட்டமும், ட்விட்டரும் தன் கடமையை செய்யுமா? இல்லை பெண் என்பதால் கரிசனம் காட்டுமா? 🚶🏽♂️ @tnpoliceoffl @VNRCollector @Vnr_Police pic.twitter.com/gMLMHoLy6M
— டைனோசர் 🦖 (@DinosaurOffcial) November 17, 2023
Thanks for Your Comments