கிலோனோவாவால் 100 ஆண்டு புல் பூண்டு கூட விளையாது !

0

கிலோனோவா எனப்படும் ஒரு வன்முறை நட்சத்திர மோதலின் பேரழிவு தாக்கம் நமது கிரகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தி யுள்ளனர். 

கிலோனோவாவால் 100 ஆண்டு புல் பூண்டு கூட விளையாது !
நடத்தப்பட்ட புதிய ஆய்வில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூட்ரான் நட்சத்திரம் மோதும் நிகழ்வு எவ்வளவு அருகில் நடந்தால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழியும் அபாயம் 

ஏற்படும் என்பது குறித்து அமெரிக்க ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளது. 

இந்த நிகழ்வை ஆய்வாளர்கள் கிலோனோவா என்று அழைக்கிறார்கள். பிரபஞ்சத்தில் ஏற்படும் மிகவும் சக்திவாய்ந்த வெடி நிகழ்வாக இதை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

திருமணம் முடிக்கப் போகும், கருத்தரிக்க காத்திருக்கும் பெண்களுக்கு !

இந்த கிலோனோவா நிகழ்வு காமா கதிர்கள், காஸ்மிக் கதிர்கள் மற்றும் எக்ஸ்-கதிர்கள் போன்ற கொடிய கதிர்வீச்சுகளை வெளியிடுவதால், அது நமது ஒட்டு மொத்த கிரகத்திற்கும் ஆபத்தான ஒன்றாக மாறுகிறது.

கிலோனோவாவால் 100 ஆண்டு புல் பூண்டு கூட விளையாது !

விண்வெளியில் ஏற்படும் மோதல், விரிவடையும் காஸ்மிக் கதிர் குமிழியை உருவாக்கத் தூண்டும், அதன் பாதையில் உள்ள அனைத்தையும் சூழ்ந்து, அதிக ஆற்றல் வாய்ந்த, சார்ஜ் செய்யப்பட்ட துகள்களின் சரமாரியை பூமியின் மீது கட்டவிழ்த்து விடும்.

இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கும் இல்லினாய்ஸ் அர்பானா - சாம்பெய்ன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஹெயில் பெர்கின்ஸ் கூறுகையில், 

சிசேரியன் முறை பிரசவமும் அதன் பலாபலன்களும் !

பூமியில் இருந்து சுமார் 36 ஒளி ஆண்டுகள் தொலைவில் நியூட்ரான் நட்சத்திர வெடிப்பு ஏற்பட்டாலும் கூட அதனால் ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளால் ஒட்டு மொத்தமாகப் பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்கள் அழிந்து விடும் என்றார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings