சென்னை வேளச்சேரி பகுதியில் 50 அடி பள்ளத்தில் சிக்கி யிருப்பவர்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது.
நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை மழை கொட்டித் தீர்த்ததால் ஒட்டு மொத்த சென்னையும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு மோசமான பாதிப்பைச் சந்தித்தது.
ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவுகள் !
தற்போது சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் சில இடங்களில் வடிந்துள்ளது. ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.
பலரும் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.
இதனால் மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் வேளச்சேரி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் தண்ணீர் மிகவும் மோசமாக தேங்கியுள்ளது.
பல இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும் காட்சி அளிக்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென 50 அடிப்பள்ளம் ஏற்பட்டது.
அந்த பள்ளத்தில் அங்கிருந்த அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்று தரையில் இறங்கி விபத்து ஏற்பட்டது. சுமார் எட்டு பேர் அதில் சிக்கி இருப்பதாக கூறப்பட்டது. விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்தனர்.
திருமணம் முடிக்கப் போகும், கருத்தரிக்க காத்திருக்கும் பெண்களுக்கு !
இதனால், 6 ராட்சத மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. நீரை வெளியேற்றினால் மட்டுமே பள்ளத்தில் சிக்கி யுள்ளவர்களை மீட்க முடியும்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உள்ளே சிக்கி உள்ளவர்களின் உறவினர்கள் கவலையுடன் உள்ளனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
Thanks for Your Comments