8 கோடி சமோசா... கோடியில் புரளும் மனிதர் !

0

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள தாணே பகுதியில் சமோசா சிங் என்ற உணவகம் அமைந்துள்ளது. இதற்கு பல கிளைகளும் உள்ளன.

8 கோடி சமோசா... கோடியில் புரளும் மனிதர் !
இந்த உணவகத்தின் உரிமையாளர்கள் நிதி சிங்கும் அவரது கணவர் எஸ்வி சிங்கும் ஆவர். இருவருமே அறிவியல் பட்டதாரிகள் என்பதால் விஞ்ஞானியாக பணியாற்றினர். 

ஆனால் இவர்களுள் நிதி சிங்குக்கு இந்தியாவில் பாப்புலராக இருக்கும் ஸ்ட்ரீட் புட்டான சமோசாவை ஒரு மதிப்பான பட்சணமாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. 

உணவுக்குழாய் புற்று நோய்க்கான காரணம் என்ன?

இதனால் தங்களது வேலையை ராஜிநாமா செய்து விட்டு உணவகம் ஒன்றை தொடங்கினர். அங்கு சுடச்சுட மொறு மொறுவென்ற சமோசா தான் ஸ்பெஷல் ஐட்டம்.


தொடக்கத்தில் மந்தமாக இருந்தாலும் இப்போது சமோசா விற்பனை அடித்து தூள் கிளப்புகிறது. நிதி சிங் நினைத்த படியே ஆரோக்கியமான சுகாதாரமான சமோசாக்களை தயாரித்து படு ஜோராக விற்று வருகிறார். 


சிங் என்ற பட்டப் பெயருடன் நம் நாட்டில் 36 மில்லியன் பேர் வசிக்கின்றனர். அதுவே ஒரு உணவுப் பொருளுக்கு சூட்டப்பட்டால் அதற்கு எவ்வளவு பெருமை கிடைக்கும். 

இது தான் நிதி சிங்கின் ஐடியா. எனவே சமோசாவுடன் சிங்கை இணைத்து சமோசா சிங் என்று தனது உணவகத்துக்கு பெயர் சூட்டினார். நாட்டில் கொரானா நோய் தாக்குதலின் போது மக்கள் வெளியே நடமாட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தது. 


இந்த நேரத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று சமோசாக்களை சமோசா சிங் டெலிவரி செய்தது. சுடச்சுட வந்த சமோசாவின் சுவை மக்களுக்குப் பிடித்து விட ஆர்டர்கள் மளமளவென பெருகி விட்டது. 


இன்றைக்கு மல்டி மில்லியன் கம்பெனியாக சமோசா சிங் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 


இந்த சாதனை பற்றி நிதி சிங்கும் அவரது கணவரும் கூறுகையில், வானவில்லை ரசிக்க வேண்டு மென்றால் மழையில் நனையா விட்டால் எப்படி? என்று நகைச்சுவையுடன் கேட்கின்றனர். 

கைநிறைய சம்பளம் தந்த வேலையை விட்டு விட்டு இருவரும் உணவகத்தை ஆரம்பித்தோம். கொரோனா காலத்தொடக்கத்தில் விற்பனையே இல்லாமல் ஜீரோ நிலைக்கு நிதிநிலைமை வந்து விட்டது. 


இருப்பினும் விடாப்பிடியாக ஆன்லைன் ஆர்டர்களைப் பெற்று மெல்ல மெல்ல வியாபாரத்தை சூடு பிடிக்க வைத்தோம் என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். 

அது என்ன மறைமுக மன அழுத்தம்? அதை எப்படி கண்டுபிடிப்பது?

சமோசா சிங் நிறுவனத்தில் இப்போது 180 பேர் வேலை பார்க்கின்றனர். நாளொன்றுக்கு 8 கோடி சமோசா விற்பனையாகிறது. 


இந்த நிலையில் சமோசா சிங் பிராண்டை பான் இந்தியா அளவுக்கு கொண்டு செல்ல வேண்டும். அடுத்த கட்டம் வெளிநாடுகளுக்கு என்று தம்ஸ்அப் சொல்கின்றனர் இந்த சிங் தம்பதியினர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings