பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகையுமான ஜெயதேவி நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், அவரின் சோகமான வாழ்க்கை குறித்த தகவல் சோஷியல் மீடியாவில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
இதயமலர் என்ற படத்தில் நடித்த இவர் அதன் பின் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் என்ற படத்தில் நடித்தார். மறைந்த நடிகை ஜெயதேவி, 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
15 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள இவர், பி.சி.ஸ்ரீராம் மற்றும் வேலு பிரபாகரன் போன்ற தொழில்நுட்ப வல்லுநர்களைத் தனது முயற்சிகள் மூலம் அறிமுகப் படுத்தினார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சென்னை ராமச்சந்திரா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் அக்டோபர் மாதம் 4-ந் தேதி 4.30 மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முதல் பெண் இயக்குநராக ஜொலித்த ஜெயதேவியின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதில், தனது கணவர் வேலு பிரபாகரன் குறித்து பேசி உள்ளார். நானும் அவரும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து பின்னர் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்திற்கு பின் வாழ்க்கை அழகாகத் தான் போய்க் கொண்டு இருந்தது. நாளை மனிதன், அதிசய மனிதன், சரியான ஜோடி என அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவியத் தொடங்கியதும், அவருடைய நடவடிக்கை மாறி விட்டது.
அவர் தனியாக உதவியாளர்களை வைத்துக் கொண்டார். அவர்களிடம் சொல்லி விட்டுத் தான் நான் அவரிடம் பேசக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போதே எங்களுக்குள் பிரிவு வந்து விட்டதை உணர்ந்தேன்.
அப்போது தான் பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பில் வேலு பிரபாகரும், சில்க்கும் ஜோடி போட்டு சுற்றும் விஷயம் என் காதுக்கு வந்தது. ஆனால், அதை கேட்டுக் கொண்டு கண்டும் காணாமல் விட்டு விட்டேன்.
அதில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது, காதலித்தது, உலகமே சில்க் மீது ஆசைப்பட்ட போது, சில்க் இவர் மேல் ஆசைப்பட்டது. இருவரும் தனிமையில் இருந்தது குறித்து அந்த கட்டுரையில் விரிவாக எழுதப் பட்டிருந்தது.
உணவு மூலம் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க !
அதாவது சில்க்குடன் ஒரு நாள் இரவு இருந்தது குறித்து பத்திரிக்கையில் வெளி வந்ததைப் பார்த்து நான் சுக்குநூறாக உடைந்து போனேன் என்று கண்ணீர் விட்டு பேசினார்.
Thanks for Your Comments