விலை குறைவான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) கார் ஒன்று விலையுயர்ந்த பிரெஸ்ஸா கார் போன்று கஸ்டமைஸ் செய்யப் பட்டுள்ளது.
இந்தியாவில் தற்சமயம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் என்று பார்த்தால், அதில் மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸாவும் ஒன்றாகும்.
ஏன் உணவுக்குழாய் பாதிக்கப்படுகிறது? தெரியுமா?
முன்பு விற்பனையில் இருந்த விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு பதிலாக, கடந்த 2022ஆம் ஆண்டில் பிரெஸ்ஸா காரை மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப் படுத்தியது.
எல்.எக்ஸ்.ஐ, வி.எக்ஸ்.ஐ, இசட்.எக்ஸ்.ஐ மற்றும் இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் என 4 விதமான வேரியண்ட்களில் மாருதி பிரெஸ்ஸா சந்தையில் விற்பனை செய்யப் படுகிறது.
இதில், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வது எண்ட்ரீ-லெவல் எல்.எக்ஸ்.ஐ வேரியண்ட் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இதன் விலை தான் குறைவாக உள்ளது.
ஆனால் இங்கு, பிரெஸ்ஸா எல்.எக்ஸ்.ஐ கார் உரிமையாளர் ஒருவர் தனது காரை மெருக்கேற்றி உள்ளார். இதனால், இந்த கார் பிரெஸ்ஸாவின் விலையுயர்ந்த இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் வேரியண்ட்டின் தரத்திற்கு இணையாகி உள்ளது.
இந்த கஸ்டமைசேஷன் பணிகளை நவி மும்பையை சேர்ந்த ஒரு மெக்கானிக் ஷாப் செய்துள்ளது. இந்த மெக்கானிக் ஷாப் இவ்வாறான மாற்றங்களை கார்களில் செய்வதற்காகவே சுற்று வட்டார பகுதிகளில் பிரபலமானதாக உள்ளது.
இதன் காரணமாகவே, இந்த குறிப்பிட்ட பிரெஸ்ஸா கார் ஓனர் தனது காரை நாசிக் பகுதியில் இருந்து மெருக்கேற்று வதற்காக நவி மும்பைக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த பிரெஸ்ஸா காரின் உட்பக்க கேபின் முழுவதுமாக மாடிஃபை செய்யப் பட்டுள்ளது. அதாவது, ஓனரின் விருப்பத்திற்கு ஏற்ப உட்பக்க கேபின் முழுவதும் காக்னக் நிற லெதரால் அலங்கரிக்கப் பட்டுள்ளது.
அழகைப் பேண பாலூட்டுவதை நிறுத்தலாமா?
அத்துடன், டேஸ்போர்டில் வுட்டன் கார்னிஷ் வழங்கப் பட்டுள்ளது. இந்த காரில் புதியதாக பிளாபுங்க்ட் சாண்டா ரோஸா 985 ஆண்ட்ராய்டு மியுசிக் சிஸ்டம் சேர்க்கப் பட்டுள்ளது.
இதன்படி, 4 கதவுகளிலும் சவுண்ட் டேம்பேனிங் வழங்கப் பட்டுள்ளதாக வீடியோவை வெளியிட்டவர்கள் கூற கேட்க முடிகிறது. அத்துடன், சோனி இ.எஸ் சீரிஸ் மியுசிக் சிஸ்டத்தையும் வழங்கி யுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காரின் வெளிப்பக்கத்தில், பிரெஸ்ஸாவின் இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் வேரியண்ட்டில் வழங்கப்படும் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் இந்த எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டில் வழங்கப் பட்டுள்ளன.
Thanks for Your Comments