தனது புகுந்த வீட்டை விட்டு வெளியேறிய மகளை மேள தாளங்கள், பட்டாசு வெடித்து வரவேற்ற ஜார்க்கண்டை சேர்ந்த நபர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது மட்டுமல்லாமல், அந்த மனிதரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜார்க்கண்டை சேர்ந்த பிரேம் குப்தா என்பவர் அவரது மகள் சாக்ஷி குப்தாவிற்கு சச்சின் குமார் என்பவருக்கு மணம் முடித்து வைத்தார்.
சச்சின் ஜார்கண்ட் மின்சார பகிர்மான கழகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். சச்சின் குமாருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி யுள்ளது. இந்த தகவலை மறைத்தே சாக்ஷியை மணமுடித்துள்ளார்.
குழந்தைகள் சாப்பிடும் நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு.. ஆராய்ச்சி !
அது மட்டுமின்றி, கணவர் மற்றும் மாமியா மாமனார், அவரை பல கொடுமைகளுக்கு உள்ளாக்கி யுள்ளனர். சில நேரங்களில் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியும் உள்ளனர்.
இதனை யடுத்து சாக்ஷி தனது திருமணத்தை முறித்து கொள்ள முடிவெடுத்தார். வழக்கமாக நம் ஊர்களில் நடப்பது போல, மகளிடம், நீ விட்டுக் கொடுத்து போ என்று சாக்ஷியின் வீட்டார் அட்வைஸ் செய்யவில்லை.
மேலும், விவாகரத்து மட்டுமல்லாது, சச்சினுக்கு திருமணத்தின் போது வழங்கப்பட்ட 17 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் திரும்ப கேட்டுள்ளனர்.
இதனை தர சச்சின் ஒப்புக் கொண்டதாக டெக்கன் ஹெரால்ட் அறிக்கை கூறுகிறது. பொதுவாக திருமணத்தில் மாப்பிள்ளை அழைப்புக்கு வைக்கப்படும் பாராத் சடங்கினை போல, மேள தாளம், பட்டாசுகள் வைத்து மகளை வரவேற்றார் பிரேம் குப்தா.
இந்த வீடியோவை பகிர்ந்தவர், ஆடம்பரமாக உங்கள் மகளுக்கு செய்து வைத்த திருமணத்தில், உங்கள் மகள் கொடுமைப் படுத்தப்படுகிறாள் என்றால் மரியாதை மற்றும் கௌரவத்துடன் மகளை வீட்டிற்கு திரும்ப அழைத்து வரவேண்டும்.
விவாகரத்தும், அதனை மேற்கொள்ளும் பெண்களையும், விமர்சனம் செய்கிறவர்களுக்கு மத்தியில், இதனை நேர்மறையான சிந்தனையாக கருதியதற்கு அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றனர்.
பாஸ்ட் புட் கடைகள்… அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் !
கணவன் வீட்டிலிருந்து வெளிவரும் அந்த பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Thanks for Your Comments