கடைக்காரரின் பலவீனத்தை பயன்படுத்தி 1.25 லட்சம் சுருட்டல் புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 50). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.
உறவினர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருவதாகவும், தற்போது சூழ்நிலை சரியில்லாததால், அருகில் தங்கி படிக்க உதவி செய்ய வேண்டும் என கூறினார்.
டோல்கேட்டில் அதிரடி மாற்றம் என்ன வென்று தெரியுமா?
இதனை நம்பிய கருணாகரன் தனது செல்போன் நம்பரை கொடுத்துள்ளார். அதன்பிறகு செல்போனில் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, சகஜமாக பேசி உள்ளனர்.
அப்போது, இளம்பெண், திடீரென்று நாம் வெளியே சென்று ஆனந்தமாக இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
அந்த கல்லூரி மாணவி கருணாகரனை நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் போன் செய்து, வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை சுடுகாட்டு சாலையில் உள்ள பம்புசெட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
இவரும் பயந்து தன்னிடம் இருந்த 75 ஆயிரம் மற்றும் நண்பரிடம் இருந்து 50 ஆயிரம் என பெற்று கொடுத்துள்ளார். அந்த கும்பலில் ஒருவர் அடையாளம் தெரிந்ததன் அடிப்படையில் கருணாகரன் இது குறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து இளம் பெண்ணை வைத்து வலைவீசி மோசடியில் ஈடுபட்ட ராமு, பிரகாஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். வனிதா, அருண்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த அறிகுறிகள் இருந்தா உங்க கண் பார்வை மங்கலாகப் போகுது !
கல்லூரி மாணவி தற்போது தலைமறைவாக உள்ளதால் கைது செய்தபிறகு வேறு யார் யார் இது போன்று சிக்கினார்கள் என்பது வெளிச்சத்திற்கு வரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
என்ன ஒரு அசிங்கமான புத்தி
ReplyDelete