நாகை அருகே திருமணமான முதல் இரவு அன்று நீ பெண்ணே கிடையாது என மணப்பெண்ணிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டதால், பாதிக்கப்பட்ட பெண் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இது தொடர்பாக மாப்பிள்ளையை மகளிர் காவல் நிலையத்தில் கைது செய்யவில்லை என எஸ்பி அலுவலகத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள தொழுதூர் உச்சி மேட்டுத்தெருவை சேர்ந்த பிச்சையன் மகன் ராஜ்குமார்.
இவருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் குதம்பநயினார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் நளினிக்கும் கடந்த 27ம் தேதி, நாகை அருகே ஆலத்தம்பாடி தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
12 பவுன் நகை, கட்டில் மெத்தை பீரோ என சீர் வரிசையுடன் சிறப்பாக நடைபெற்ற இந்த திருமணத்தில் உற்றார் உறவினர்கள் மகிழ்ச்சி பொங்க மணமக்களை வாழ்த்தி தொழுதூரில் உள்ள மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அன்றிரவு நடந்த முதல் இரவில், மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை, பாலியல் தொல்லை கொடுத்து மிருகத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் உறைந்த நளினி அங்கே மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த பெண்ணின் உறவினர்கள் நளினியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில். தனது மகளுக்கு தாலி கட்டிய ராஜ்குமார், முதலிரவில் வக்கிர புத்தியுடன் மூர்க்கத் தனமாக நடந்து கொண்டதாகவும், அனுமதி இல்லாமல் பாலியல் சீண்டலால்
உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ள தாகவும் மணப்பெண்ணை பெண்ணே அல்ல எனக் கூறியதாகவும், எனவே தனது மகளை மானபங்கம் மற்றும் அவமானப் படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி,
பெண்ணின் தாயார் பரமேஸ்வரி நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறவினர்களுடன் வந்து புகார் அளித்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அதனை தொடர்ந்து நாகை எஸ்பி ஜவஹர் உத்தரவின் பேரில் ராஜ்குமாரை நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.
கட்டிய மனைவியாக இருந்தாலும், அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்று சட்டம் இருக்கின்ற நிலையில், மனைவியின் அனுமதி இல்லாமல்
பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments