மேகாலயா மாநிலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்?

0

பெயருக்கு ஏற்ப மேகங்களின் ஆலயம் தான். அடிக்கடி மழை பெய்து இம்மாநிலத்தினை உலகின் அதிக ஈரப்பதம் உள்ள பகுதியாக வைத்து உள்ளது.

மேகாலயா மாநிலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்?
ஆசியாவின் துய்மையான கிராமம் என அழைக்கபடும் மௌலியாங் இந்த மாநிலத்திலேயே உள்ளது. இது இந்த மாநிலத்தின் தலைநகரான ஷில்லாங் இல் இருந்து 90 கி. மீ தொலைவில் உள்ளது.

படிப்பிலும் 100% கல்வி அறிவு இந்த பகுதி பெற்றுள்ளது. வழக்கமாக இந்தியாவில் திருமணத்திற்கு பிறகு பெண்கள் கணவன் வீடுகளுக்கு சென்று வாழ்வது வழக்கம்.

ஆனால் இந்த மாநிலத்தில் மட்டும் தான் ஆண்கள் திருமணத்திற்கு பிறகு பெண் வீடுகளுக்கு சென்று அங்கே வசிக்க வேண்டும். மேலும் அங்கு உள்ளவர்களை அவனே அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய வேண்டும்.

உலகில் அதிக மழை பொழியும் இடமான மவுசின்ராம் (ஆண்டுக்கு சராரியாக 1200 c.m) இந்த மாநிலத்தில் தான் அமைத்து உள்ளது. தற்போது இதற்கு முன் சிரபுஞ்சி (உள்ளூர் பெயர் சோரா) இந்த சிறப்பினை வைத்து இருந்தது.

கட்டாயம் பெண்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் !

உலகில உயிருடன் உள்ள மரங்களை வைத்து செய்த இரண்டு அடுக்கு வேர்களினால் ஆன பாலம் சிரபுஞ்சியில் அமைந்து உள்ளது. 

(கயல் படத்தில் எங்கிருந்து வந்தாயோ என தொடங்கும் பாடலில் கூட இந்த இடத்தினை காண்பித்து இருப்பார்கள்). உலகில பெண்கள் வழி மரபினை பின்பற்றும் ஒரே மக்கள் மேகாலயா பழங்குடி இன மக்களே.. 

இதன்படி பெற்றோரின் சொத்துக்கள் அனைத்தும் தங்களுடைய இளைய மகளுக்கு சேரும் அவளே அவர்களை கடைசி வரை பராமரித்து கொள்ள வேண்டும்

சிவனின் தலைப்பகுதியில் (வடக்கு) இருந்து வற்றாத நதி (கங்கை) வருவதாக கூற படுவது போல் இம்மாநிலத்தில வடக்கு பகுதி வழியே பிரம்மபுத்திரா ஆறு (வற்றாத நதி) பாய்ந்து வங்காள தேசத்தின் உள்ளே நுழைகிறது.

இந்த மாநிலத்தில் 70 % பகுதி காடுகளினை கொண்டுள்ளது. மேலும் 4 தேசிய பூங்காக்கள் உள்ளது.

உலகில மாசற்ற தூய நீர் (Crystal Clear& Transparent) உள்ள ஆறு Dawki River இங்கு அமைந்து உள்ளது. இதனை அனைவரும பார்த்து இருப்பீர்கள் அடிக்கடி வாட்ஸப்பில் கூட இந்த புகைப்படம் வரும்.

இந்திய மேலண்மைக் கல்விக்கான நிறுவனம் (IIM) ஷில்லாங்கில் அமைந்து உள்ளது.

மேலே உள்ள இந்த கல்வி நிறுவனத்திற்கு 2015 சூலை 27 இல் உரையாற்ற சென்ற போது தான் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் பிரிந்தது இம்மாநிலததின் நடந்த மிக சோகமான நிகழ்வு.

குழந்தையில்லா குறையில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்?

வேர்ப்பாலங்கள்

மேகாலயா மாநிலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்?

மேகாலயாவின் தென்பகுதியில் மரங்களின் வேரைக் கொண்டு இயற்கையான முறையில் அமைக்கப்படும் பாலங்களே வேர்ப்பாலங்கள் என அழைக்கப் படுகிறது. 

பயிற்சி பெற்ற காசி மற்றும் ஜெயந்தியா பழங்குடியினரால் இவை வளர்க்கப் படுகின்றன. அவர்கள் அடர்த்தியான காடுகள் வழியாக ஓடும் நீரோடைகளின் குறுக்காக வேர்ப்பாலங்கள் வளர்க்கும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மரங்களின் மேல் பக்கமாக உள்ள வேர்களை கையால் வேண்டியவாறு வளைத்து முறுக்கி இணைத்து வேர்ப்பாலங்கள் உருவாக்கப் படுகின்றன. இந்தப் பாலங்களை அமைக்க சுமார் 15 ஆண்டுகள் ஆகின்றன. 

இந்த உயிருள்ள வேர்ப்பாலத்தை (LIVING ROOT BRIDGE) அமைக்கும் தொழில்நுட்பம் பல நூறு ஆண்டுகளாக பரிணமித்து வந்துள்ளது. இந்தப் பாலம் மரங்களின் வேர் தடிமன் கூடக் கூட வலிமை மிக்கதாக மாறுகிறது. 

புருவ முடிகளைத் திருத்தும் பெண்களுக்கு அதிர்ச்சித் தகவல் !

நன்கு வளர்ந்த வேர்ப்பாலங்கள் மிகவும் உறுதி வாய்ந்தவை. சில பாலங்கள் 50 பேர் வரை எடை தாங்கக் கூடியவையாகவும், சுமார் 100 அடிக்கு மேல் நீளமுடை யவையாகவும் உள்ளன. 

இரண்டு அடுக்கு வேர்ப்பாலம் ! 

மேகாலயா மாநிலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்?
(DOUBLE DECKER LIVING ROOT BRIDGE) சோரா அருகில் உள்ள நான்க்ரியாட் கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு அடுக்கு வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் ஆன பாலங்களில் மிகவும் பிரபலமானது. 

இப்பாலம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட மிகப் பழைமையான இயற்கைப் பாலமாகும். கிழே ஓடும் நீரோடையைப் பார்த்தவாறு பாலத்தின் மீது நடந்து செல்வது ஒரு இனிய அனுபவமாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings