இவர் மூன்றாம் உலகப்போர் நிகழாமல் இருப்பதற்கு காரணமானவர். இவர் பெயர் ஸ்டானிஸ்லவ் பெட்ரோவ். அவர் சோவியத் ரஷ்யாவின் விமானப் படையில் அதிகாரியாக இருந்தவர்.
மாஸ்கோவின் தெற்கிலிருந்த, ஸெர்புகோவ் - 15 என்ற ரகசிய நகரத்தில், மிகப் பெரிய பதுங்கு குழியில், ஓகோ என்று அழைக்கப்பட்ட, அமெரிக்காவின் அணு ஆயுத தாக்கலை கண்காணிக்கும் எச்சரிக்கை மையத்தினை, செப்டம்பர் 26, 1983 அன்று நிர்வகித்து வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு தான், சோவியத் விமானம் ஒன்று அமெரிக்க பயணிகள் விமானத்தினை தவறுதலாக சுட்டு வீழ்த்தி, 269 பயணிகள் கொல்லப் பட்டிருந்தனர்.
அமெரிக்க அதிபர் ரீகன், ஐரோப்பாவில் அமெரிக்காவின் அணு ஆயத பாதுகாப்பிற்கு திட்டங்களை அறிவித்திருந்தார். அப்போது, திடீரென அபாய விளக்குகள் எரியத் தொடங்கின.
விரைவில் பெண்கள் கர்ப்பமாக இந்த உடற்பயிற்சியை செய்யணுமாம் !
பெட்ரோவ் ரஷ்ய அரசிடம் இதை தெரிவித்து, அமெரிக்க ஏவுகணைகளுக்கு வானத்திலேயே பதிலுக்கு தாக்குதல் நடத்த வேண்டும். அவர் 50-50 வாய்ப்புகள் இத்தகைய அபாய விளக்குகள் சரியாக இருப்பதற்கு உள்ளது என்று கருதினார்.
மூன்றாவது உலகப்போர் உருவாக தான் காரணமாக இருக்க கூடாது என எண்ணினார். பதில் தாக்குதல் நடத்த வேண்டாமென, தனது கட்டளைக்கு உட்பட்ட வீரர்களுக்கு தெரிவித்தார்.
இதைப் பற்றி, அவரிடம் பாராட்டினால், அவர் தனது கடமையை செய்ததாக, சாதாரணமாக பதிலளிப்பார்.
ரிஷி கபூரின் உயிரைப் பறித்த புற்றுநோய் தெரியுமா? எதனால் வருகிறது?
அவர் தற்போதைய உலகில், இவ்வாறு தவறான புரிதலினால், அணு ஆயுத தாக்குதல்கள் நடைபெறலாம் என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார். 2017ம் ஆண்டு, செப்டம்பர் 18ல் , தனது 77வது வயதில் இயற்கை எய்தினார்.
மூன்றாவது அணு ஆயுத உலகப் போரினை தவிர்த்த, இவர் நினைவு கூரப்பட வேண்டியவர்.
Thanks for Your Comments