மைனஸ் டிகிரியில் சைபீரியா.. வெளியே போனால் உறைந்து விடுவோம் !

0

ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் சில பகுதியில் வரலாற்றில் இல்லாத வகையில் வெப்பம் மிக மோசமாகச் சரிந்துள்ளது. வெளியே சென்றாலே உறைந்து விடுவோம் என்ற சூழலே அங்கு உருவாகியுள்ளது.

மைனஸ் டிகிரியில் சைபீரியா.. வெளியே போனால் உறைந்து விடுவோம் !
உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா. இது இந்தியாவைக் காட்டிலும் சுமார் நான்கு மடங்கு பெரியது. 1.7 கோடி சதுர கிமீ பரப்பளவு கொண்ட ரஷ்யாவில் பல்வேறு கலாச்சாரம், மொழிகள் உள்ளன.

அப்படி வடக்கு ரஷ்யாவில் ஆர்க்டிக், அதாவது வட துருவம் அருகே அமைந்துள்ள பகுதி தான் சைபீரியா. இந்த பகுதியில் தான் இப்போது சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் குறைந்துள்ளது.

சிக்கலான உறுப்பான மூளையைப் பற்றித் தெரிந்து கொள்ள !

ரஷ்யாவின் இந்த சைபீரியா பகுதியில் நேற்றைய தினம் வெப்பம் மைனஸ் 58 டிகிரி செல்சியஸாக (-72 டிகிரி பாரன்ஹீட்) குறைந்தது. சைபீரியா என்பது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,000 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. 

அதாவது இது சென்னை டூ டெல்லியை காட்டிலும் இரண்டு மடங்கு தொலைவாகும். இங்கே அமைந்துள்ள யாகுட்ஸ்க் நகரம் உலகின் குளிரான நகரங்களில் ஒன்றாகும். 

இந்த நகரத்தில் தான் இப்போது வெப்பம் கடுமையாகச் சரிந்துள்ளது. இந்த நகரம் முழுக்க உறைபனி மேகங்கள் மற்றும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது, 

இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அது பார்க்கும் அனைவருக்கும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. அந்தளவுக்குக் கண்ணில் பட்டவரை எல்லா இடங்களிலும் வெள்ளை நிறத்தில் பனி போர்த்தி இருக்கிறது.

இது தொடர்பாக அங்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், இந்த வானிலையை அனுபவிப்பதற்காகவே நான் இங்கு யாகுட்ஸ்க் வந்தேன். டிசம்பரில் எப்போதும் இந்தப் பகுதியில் குளிர் குறையும். 

ஆனால் இந்தளவுக்கு வெப்பம் குறையும் என்பதை நான் எதிர்பார்க்க வில்லை என்பதே உண்மை. தயார் நிலையில் உடைகளை எடுத்து வந்ததால் நான் தப்பித்தேன். 

இல்லை யென்றால் நான் சில நிமிடங்களில் உறைந்து போவேன். இந்த உறையும் வெப்பத்தால் எனது உடையே கடினமாகி விட்டது. இந்த குளிரில் போனுக்கும் ஏதோ ஆகிவிட்டது. 

புல் சார்ஜ் இருந்தாலும் மொபைல் சார்ஜ் சில நிமிடங்களில் காலியாகி விடுகிறது. சட்டை, பேண்ட், கையுறை என ஒன்றுக்கு இரண்டு போட்டு அதன் மீது ஸ்வெட்டர் போட்டால் மட்டுமே சமாளிக்க முடிகிறது என்றார். 

ரத்தக் குழாய் நோய்களால் ஏற்படக்கூடிய உயிரிழப்பு !

மேலும், கெட்டியாக உடைகளைப் போட்டுக் கொண்டு நடந்து கொண்டே இருக்க வேண்டி இருப்பதாகவும் சற்று நேரம் அமர்ந்தாலும் உறையும் அளவுக்கு உடலில் குளிர் அதிகரித்து விடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று இரவு சைபீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சகா குடியரசின் பல பகுதிகளில் மைனஸ் 55 செல்சியஸ் கீழ் சென்றது. 

மைனஸ் டிகிரியில் சைபீரியா.. வெளியே போனால் உறைந்து விடுவோம் !

குறிப்பாக அங்குள்ள ஓமியாகோன் என்ற பகுதியில் மைனஸ் 58 செல்சியஸுக்கு சென்றது. ஈரப்பதம் மற்றும் காற்றின் காரணமாக இது மைனஸ் 63 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

யாகுட்ஸ்கில் உள்ள சந்தையில், சாதாரணமாக மீனை வெளியே வைத்தாலே அது உறைந்து விடுகிறது. பொதுவாக மீனை ஐஸ் பெட்டிகளில் வைத்தே விற்பார்கள். 

நொறுங்கும் எலும்புகள் - ஆஸ்டியோ போரோசிஸ் !

ஆனால், இந்த குளிரில் சும்மாவே அது உறைந்து விடுவதாகவும் ஐஸ் பெட்டிகள் தேவையில்லை என்றும் மீன் விற்பனை செய்வோர் தெரிவித்தனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings