பிள்ளைகள் விரட்டி அடித்ததால் நொந்து போன சேலம் முதிய தம்பதி, இவங்களை நம்புவதற்கு சாப்பாடு இல்லாமல் செத்து போயிடலாம் என்று கண்ணீருடன் புகார் தெரிவித்தனர்.
முதியோர்கள் கடைசி காலங்களில் பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டு சாப்பாட்டுக்கு கூட அவர்களிடம் கையேந்தும் நிலையில் வாழ்கிறார்கள்.
மகன் பெயரில் வீடு, மகளுக்கு நகைகள் என்று எல்லாவற்றையும் கொடுத்து விட்டு கடைசி காலத்தில் சாப்பாட்டுக்கு கூட கூனிக்குறுகி வாழும் நிலை உள்ளது.
மருமகள் என்ன சொல்வாளோ என்று பயந்து பயந்து சாப்பாடு சாப்பிடும் நிலையும், மகன் என்ன நினைப்பானோ, மகள் என்ன நினைப்பாளோ என்று சாப்பாடு கேட்க கூச்சப்படும் நிலையே பல இடங்களில் உள்ளது.
ஏன் ஒரு பக்கமா தலை வலிக்குது தெரியுமா? இந்த நோயே காரணம் !
முதியோர்கள் கடைசி காலத்தில் தங்கள் பெயரில் பணம் சேமிக்க வேண்டியதின் அவசியத்தை ஒவ்வொரு சம்பவங்களும் நினைவு படுத்துகின்றன.
முதியவர்கள் இறக்கும் வரை தங்களிடம் இருக்கும் சொத்துக்களை, அல்லது பணத்தை பிள்ளைகளுக்கு கொடுக்க கூடாது என்பதற்கு பல சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்.
அதே போல் கடைசி காலத்தில் பிள்ளைகளை எதிர்பார்த்து நிற்கும் நிலை, எந்த பெற்றோருக்கும் வரக்கூடாது. ஏனெனில் அதை விட கொடுமையான எதுவும் இல்லை.
வசதியான அல்லது ஓரளவு சம்பாதித்து வாழ்ந்த பெற்றோர்கள், கடைசி காலத்தில் பிள்ளைகளை எதிர்பார்த்து நிற்காமல் இருக்க நன்றாக இருக்கும் காலத்திலேயே, முதலீடுகளை செய்து கொள்வது நல்லது.
அப்போது தான் கடைசி காலத்தில் பிள்ளைகள் உங்கள் காலை சுற்றி வருவார்கள். உங்களுக்கான மரியாதையும் இருக்கும்.
அதே நேரம் வசதியற்ற, கடினமாக உழைத்து பிள்ளைகளை கரை சேர்க்கவே பணம் முழுவதையும், உடல் உழைப்பையும் கொட்டிய பெற்றோர், தங்கள் நிலையை நினைத்து நிச்சயம் கலங்க வேண்டாம்.
ஏனெனில் உங்கள் பிள்ளைகள் உங்களை காக்க மறுத்தால், முதியோர் பாதுகாப்பு சட்டம் உள்ளது. அந்த சட்டத்தின் கீழ் வாழ்வதற்கான மாதாந்திர பராமரிப்பு தொகையை பெற்றுத் தருமாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து, சட்ட ரீதியாக பராமரப்பு தொகை பெற உதவுவார்கள். அவர்கள் மாதாந்திர பராமரிப்பு தொகை தரமறுத்தால், சிறை தண்டனை கிடைக்கும் என்பதால், நிச்சயம் உங்களை கைவிட மாட்டார்கள்.
மனைவியை வெட்டி வீசிட்டேன்.. எனக்கு எஸ்டேட் பொண்ணு வேணும் !
சரி விஷயத்திற்கு வருவோம். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குட்டப்பட்டி அம்மன் கோவிலூரில் வசிக்கிறார்கள் முதிய தம்பதி. இந்த முதிய தம்பதியை உணவுக்கு கூட பணம் தராமல் மகன்கள் விரட்டி அடித்துள்ளனர்.
ஆதரவு இன்றி நிர்கதியான பெற்றோர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு வந்து குறைகளை சொல்லி புகார் அளித்தனர்.
அதன் பின்னர் தங்கள் நிலையை எண்ணி கதறி அழுதபடி அந்த பெற்றோர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
அதில் மேட்டூரை அடுத்த குட்டப்பட்டி அம்மன் கோவிலூரில் எங்கள் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுத்தோம். அதனை விற்று தின்றுவிட்டு ஜீவமானம்சம் கொடுக்கவில்லை.
ஒரு பைசா கூட எங்களிடம் இல்லை. இரண்டு பேரும் வயசான காலத்தில் பிழைக்க முடியவில்லை. சாவுறதுக்கு கூட வழியில்லை. அதனால் தான் இரண்டு வருசமாக இங்க வந்து போகிறோம்.
பிள்ளைகள் காசு கொடுக்காமல் விரட்டி விட்டார்கள். எங்க போய் பார்ப்பியோ பாரு.. என்னால் தரமுடியாது என்கிறார்கள்.
என் மகனே எங்கேயோ போய் சாவு என்கிறார். பிழைக்க எதாவது வழி இருந்தா போதும் கண்ணு. தினமும் ஆஸ்பத்திரி போகனும்.. இவங்கள நம்புறதுக்கு செத்தே போயிடலாம்.
நான் செத்தா அவரு இருக்கமாட்டாரு. இரண்டு பேரும் ஒட்டுக்கா செத்து போகலாம் என்று கண்ணீருடன் முதியவர்கள் கூறினார்கள். பின்னர் வேதனையுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.
Thanks for Your Comments