கடல் தொழிலில் முக்கிய அங்கமான மீன் பிடிக்கும் நடவடிக்கைகள் மூலம் பிடிக்கப்படும் மீன்களில் எத்தனை சதவீதம் சமைக்கப்பட்டு உணவாக நம் தட்டில் முடிகின்றன தெரியுமா?
வணிக மீன்பிடி நடவடிக்கைகளின் போது பிடிபட்ட மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள், நீர் பறவைகள், திமிங்கிலங்கள் மற்றும்
போர்போயிஸ்கள் எனப்படும் டால்பின் வகையைச் சேர்ந்த மீன்களும், ஆல்பட்ரோஸ் முதல் ஆமைகள் வரை அனைத்தும் தினந்தோறும் பிடிக்கப் படுகின்றன.
தாய்ப்பால் கொடுத்த மறுநொடி... மருத்துவமனையில் ஆச்சர்யம் !
சுமார் 6 லட்சம் கடல்வாழ் உயிரினங்களும், கடல் பறவைகளும் தங்கள் இனத்தின் அழிவின் விளிம்பில் நிற்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பைகாட்ச் என்பது கண்மூடித்தனமான பெரிய அளவிலான ஆழ்கடல் மீன் பிடித்தலில் பயன்படுத்தப்படும் வலைகள், அனைத்து உயிரினங்களையும் ஒரு சேர இழுத்து வந்து விடுவதால், தேவையில்லாத உயிரினங்கள் கூட,. கடலில் இருந்து அப்புறப் படுத்தப்பட்டு விடுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லியன் டன் பைகேட்ச்கள் இழுவைகளில் பிடிபடுவதாக கூறப்படுகிறது. இது நமக்கு தெரிந்த குறைந்த அளவே.
வீணாக்கும் படுவது இதை விட அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அடிவயிற்று இழுவைகள், கோஸ்ட் கியர் மற்றும் லாங் லைன் ( வலைகள் சுமார் 50 மைல் நீளத்துக்கும் அதிகமாக இருக்கும். )
இவைகளில் தூண்டில்களில் உணவை ஈர்க்க பயன்படுத்தப்படும் மீன்களால் கடல் பறவைகள் ஈர்க்கப்பட்டு அவைகளும் தூண்டில்களில் மாட்டிக் கொள்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2.3 பில்லியன் பவுண்டுகள் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை மூலம் வீணடிக்கும் படுகின்றன.
அமேசான் உரிமையாளர் போனை ஹேக் செய்தாரா சவுதி இளவரசர்?
தற்போது இத்தகைய பைகேட்ச் மூலம் தேவையில்லாத உயிரினங்கள் பிடிபடாமல் இருக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
இவ்வுலகம் மிகவும் அழகானது. வாழ்வதற்கு ஏற்றது தான். ஆனால் மற்ற உயிரினங்களுக்கல்ல.
Thanks for Your Comments