ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கோப்பை 2024 தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் இடம் பெற்றுள்ள நிலையில், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
A பிரிவில் இந்தியா, C பிரிவில் ஆஸ்திரேலியா, D பிரிவில் பாகிஸ்தான் முதலிய அணிகள் முதல் இடங்களை பிடித்த நிலையில், B பிரிவில் முதலிரண்டு இடங்களை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் பிடித்தன.
எனவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கியது தென்னாப்பிரிக்கா அணி.
27 ஓவரில் 273 ரன்
ஒரு நல்ல ஸ்கோரை ஸ்காட்லாந்து எட்டிய நிலையில் தென்னாப்பிரிக்காவின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு பறிபோனதாகவே நினைக்கத் தோன்றியது.
ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்டோக் வேறொரு திட்டத்தில் இருந்தார். தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீவ், காசிம் கான் வீசிய 3வது ஓவரில் சிக்சர் வேட்டை நடத்தினார்.
3வது ஓவரில் மட்டும் 5 சிக்சர்கள், 1 பவுண்டரி என பறக்கவிட்ட அவர் 13 பந்துகளில் 50 ரன்களை பதிவுசெய்து மிரட்சியை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து அதிரடியை நிறுத்தாத அவர், 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உட்பட 86 ரன்கள் குவித்து வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய டெவான் மரைஸ் மற்றும் டேவிட் டீஜெர் இருவரும் ஸ்டீவ் ஸ்டோக் விட்ட இடத்திலிருந்து அதிரடியை தொடர்ந்தனர்.
டெவான் மற்றும் டேவிட் இருவரும் 80 ரன்கள், 43 ரன்கள் என அடித்து துவம்சம் செய்ய, தென்னாப்பிரிக்காவின் இந்த இளம் அணி வெறும் 27 ஓவர்களிலேயே 10 ரன்ரேட்டில் 273 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.
இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம் சம புள்ளிகளில் இருந்த இங்கிலாந்தை ரன்ரேட் மூலம் பின்னுக்கு தள்ளி, புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
13 பந்தில் அரைசதம் !
யு19 உலகக்கோப்பை வரலாற்றில் மிகக்குறைவான பந்துகளில் அரைசதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை, 17 வயதான தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்டோக் படைத்துள்ளார்.
தம் பிரியாணி செய்ய எளிய டிப்ஸ்.. இதை கண்டிப்பா டிரை பண்ணுங்க !
இந்த சுற்றில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சூப்பர் 6 சுற்றுக்கு தகுதிபெறும்.
பின்னர் மீதமிருக்கும் 12 அணிகளில் A பிரிவில் இருக்கும் அணிகள் D பிரிவில் இருக்கும் அணிகளுடனும், B பிரிவில் இருக்கும் அணிகள் C பிரிவில் இருக்கும் அணிகளுடனும் மோதி அரையிறுதிக்கு தகுதி பெற்று விளையாடும்.
South Africa opener Steve Stolk has slammed a 13-ball fifty against Scotland at the #U19WorldCup - including 34 off a single over 🔥
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 27, 2024
LIVE: https://t.co/IElta9EPhH pic.twitter.com/aRx48Iko3f
Thanks for Your Comments