மணிக்கு 4 ஆயிரம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் நகரம் தெரியுமா?

0

உலகெங்கிலும் உள்ள முக்கிய பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு பெரிய சவாலாக இருப்பது போக்குவரத்து நெரிசல். 

மணிக்கு 4 ஆயிரம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் நகரம் தெரியுமா?
உதாரணமாக பெங்களூரு, மும்பை போன்ற இடங்களை எடுத்துக் கொண்டால், அங்கு சொந்த போக்குவரத்து வைத்திருந்தாலும் சரி, பொது போக்குவரத்தாக இருந்தாலும் சரி கடுமையான போக்குவரத்து நெரிசல், வழக்கமாகி விட்டது.

பரபரப்பான நகரத்தில் கார் ஓட்டுவது எவ்வளவு சிக்கலானதோ அதனை விட கூடுதல் சவாலானது பார்க்கிங், நிறுத்த இடமெல்லாம் இருக்கும். ஆனால் அதற்கு நீங்கள் 4 ஆயிரம் ரூபாய் வரை பொது பார்க்கிங் கட்டணமாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.


அப்படி உலகெங்கிலும் உள்ள ஆறு முக்கிய நகரங்கள், அந்தந்த நாடுகளில் உள்ள மற்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது, அதிக அளவு பார்க்கிங் கட்டணங்கள் வசூலிக்கின்றன.

சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. காதலிக்காக கணவன் கொலை !

துபாய்


துபாயில் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச பார்க்கிங் கட்டணம் AED 3 (ரூ. 68). முதல் நான்கு மணி நேரத்திற்கு AED 16 (ரூ. 363) வரை வசூலிக்கப் படுகிறது. நான்கு மணி நேரத்திற்கு மேல் போனால் வாகன உரிமையாளருக்கு AED 20 (ரூ. 453) வரை வசூலிக்கப் படுகிறது.


லண்டன்

மணிக்கு 4 ஆயிரம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் நகரம் தெரியுமா?

லண்டன் உங்கள் காரை நிறுத்துவதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக கருதப்படுகிறது. 

2005 மற்றும் அதற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக பார்க்கிங் கட்டணம் GBP 4.90 மற்றும் GBP 7.20 வசூலிக்கப் படுகிறது. அதாவது தோராயமாக ரூ.726 ஆக இருக்கும்.


ஆம்ஸ்டர்டாம்


நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் காரை நிறுத்துவதற்கு மிகவும் விலையுயர்ந்த நகரமாக கருதப்படுகிறது. இந்த நகரத்தில் சராசரியாக ஒரு மணிநேர பார்க்கிங் கட்டணம் சுமார் 13.82 யூரோக்கள் ( ரூ.1,215 ).

திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் தீவில் விடப்படும் பெண்கள் !

மும்பை


மும்பை நகரம் பல விஷயங்களுக்கு பெயர் பெற்றது, அவற்றில் ஒன்று அதிகமான ட்ராஃபிக்.


வாஷி, சிவாஜி சவுக்கின் பரபரப்பான இடத்தில் கார்களை நிறுத்த விரும்புவோர், ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும். இது மும்பையின் மிகவும் விலையுயர்ந்த பார்க்கிங் இடமாக மாறியுள்ளது.


நியூயார்க்

மணிக்கு 4 ஆயிரம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் நகரம் தெரியுமா?

உங்கள் தனிப்பட்ட காரை நிறுத்துவதற்கு இங்கு ஆகும் செலவே தனி. உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களில் நியூயார்க் ஒன்றாகும். 

சராசரி தினசரி பார்க்கிங் கட்டணம் USD 19 (ரூ. 1,581), ஆனால் இது USD 50 வரை செல்லலாம். அதாவது இந்திய மதிப்பில் 4,166 வரை வசூலிக்கப் படுகிறது.

திடீரென்று உடல் பாகங்கள் ஏன் மரத்துப் போகிறது?

பாரிஸ்


சென்ட்ரல் பாரிஸில், உங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கான கட்டணங்கள் ஒரு மணி நேரத்திற்கு 4 யூரோ முதல் 6 யூரோக்கள் வரை ஆகும். இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 351 முதல் ரூ. 527 வரை இருக்கும். 


சென்ட்ரல் பாரிஸில் தான் இப்படி மிட் டவுன் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் போது பார்க்கிங் கட்டணங்கள் மலிவாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings