அண்டார்டிகாவில் 40 ஆண்டுக்கு முன்பு இந்தியா அமைத்த ஆராய்ச்சி தளம்?

0

1980 களில் ஒவ்வொரு பெரிய நாடும் அண்டார்டிகாவின் கனிம மற்றும் கடல் வளங்களை ஆராய்வதற்கும் உரிமை கோருவதற்கும் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தன. 

அண்டார்டிகாவில் 40 ஆண்டுக்கு முன்பு இந்தியா அமைத்த ஆராய்ச்சி தளம்?
அந்த பந்தயத்தில் இந்தியாவும் தன்னை ஈடுபடுத்தி கொண்டது. அண்டார்டிகாவிற்கு முதல் இந்திய அறிவியல் பயணம் 1981 இல் டாக்டர் எஸ்.இசட் காசிம் தலைமையில் 21 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கப்பட்டது. 

இந்த பயணம் கோவா கடற்கரையில் இருந்து புறப்பட்டது. 1983 ஆம் ஆண்டுக்கான இந்த திட்டம் கங்கோத்ரி என்று அழைக்கப்பட்டது. டிசம்பர் 26 அன்று அண்டார்டிகாவை அடைந்தது குழு. 

60 நாட்களில் நிரந்தர தளம் அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் மூன்றாவது நாளிலேயே ஒரு விபத்தால் திட்டம் தடையானது. 

கை கழுவுவது நம்முடைய அடிப்படை சுகாதாரம் !

ஹெலிக்காப்டரில் ஒரு முக்கிய பொருளை ஆய்வு கூட்டத்தில் இருந்து ஏற்றும் போது ஹெலிக்காப்டர் நிலை தடுமாறியது.

இது குறித்து அதன் திட்ட இயக்குநர் சென்குப்தா கூறுகையில், இந்த சம்பவம் நடக்கும் போது சில நிமிடங்களுக்கு, குழு உறுப்பினர்கள் இறக்கும் நிலை ஏற்படுமோ என்ற நிலை ஏற்பட்டது. 

ஆனால் அவர்கள் நல்ல வேளையாக உயிருடன் இருந்தனர். இந்த சம்பவம் குறித்து அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நேரடியாக எங்களை தொடர்பு கொண்டார். 

அவர் எங்களிடம் முதலில் கேட்ட கேள்வி உயிர் பிழைத்தவர்களின் நல்வாழ்வு பற்றி, அடுத்தது அந்த திட்டத்தை பற்றி, எங்கள் குழுவுக்கு அந்த தருணத்தில் கங்கோத்ரியை முடிக்கா விட்டால் திரும்பிச் செல்ல மாட்டோம் என்பது போர் முழக்கமாக மாறியது என்கிறார் குப்தா.

விஞ்ஞான ஆய்வு, பணியின் முக்கிய நோக்கமாக இருந்த போதிலும், குழுவில் விஞ்ஞானிகளை விட அதிகமான பாதுகாப்பு பணியாளர்கள் இருந்தனர். 

அனைவரும் ஜம்மு & காஷ்மீரில் உள்ள மச்சோய் பனிப்பாறையில் பயிற்சி பெற்றவர்கள். 1981 டிசம்பரில் அண்டார்டிகாவுக்கான இந்தியாவின் முதல் பணி ரகசியமாக கருதப்பட்டது. 

மேலும் 21 குழு உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூட அதைப் பற்றி பேச அனுமதிக்கப் படவில்லை. 

அந்த பணியின் இளைய உறுப்பினர்களில் ஒருவரான அமிதாவா சென்குப்தா, கூறுகையில் இந்த அனுபவம் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது என்று ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.

1983 இல், அண்டார்டிகாவில் இந்தியாவின் முதல் அறிவியல் அடிப்படை நிலையம் அமைக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய அண்டார்டிக் திட்டம், 40 அறிவியல் பயணங்களை நிறைவு செய்து, அண்டார்டிகாவில் தக்ஷின்கங்கோத்ரி (1983), மைத்ரி (1988) மற்றும் பாரதி (2012) என பெயரிடப்பட்ட மூன்று நிரந்தர ஆராய்ச்சி தளங்களை உருவாக்கி யுள்ளது.
பட்டர் ஸ்காட்ச் குக்கீஸ் ரெசிபி !

அண்டார்டிகா தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 அன்று கொண்டாடப் படுகிறது. இது கண்டத்தின் நிர்வாகத்தை சாத்தியமாக்கும் சர்வதேச ஒத்துழைப்பை முன்னிலைப் படுத்தவும் கொண்டாடப் படுகிறது.

இன்றைய நிலவரப்படி மைத்ரியும் பாரதியும் முழுமையாக செயல் படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings