400-க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளை கொண்ட வியக்க வைக்கும் தோட்டம் !

0

ட்ராவல் மோகம் எல்லாரிடமும் வந்து விட்டது. பயண பிரியர்கள், வித்தியாசமான இடங்களை தேடி தேடி சென்று புது விதமான அனுபவங்களை பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்திருக்கிறது பாம்பு தோட்டம். 

400-க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளை கொண்ட வியக்க வைக்கும் தோட்டம் !
மக்கள் இதனை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். எங்கே இருக்கிறது இந்த இடம்? வியட்நாம் நாட்டில் தான் இந்த அரிய வகை தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் உள்ள மரங்கள் எந்த விதமான பழங்களையோ, காய்களையோ தருவதில்லை. மாறாக அவற்றின் கிளைகளில் பாம்புகள் மட்டுமே நிறைந்துள்ளன. ஆம் தோட்டத்தில் பாம்பு, பூச்சிகள் இருந்து நாம் கேள்வி பட்டிருப்போம். 

இந்த வியட்நாம் தோட்டத்தில் பாம்புகள் பழங்களை போல வளர்க்கப் படுகின்றன. dong tam என்ற பண்ணை தோட்டத்தில் தான் பாம்புகள் வளர்க்கப் படுகின்றன. 

மற்ற பண்ணைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிப்பது போல, இங்கு பாம்புகள் வளர்க்கப் படுகின்றன. இங்கு 400-க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் ?

அவற்றின் விஷத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப் படுகின்றன. இதனுடன், அவர்களின் விஷத்தை குறைக்க ஆன்டிடோக்களும் தயாரிக்கப் படுகின்றன. பாம்புக்கடிக்கு பயனுள்ள மாற்று மருந்துகளை உருவாக்க தினசரி பரிசோதனைகளை நடத்துகிறது. 

குறிப்பிடத்தக்க வகையில், பண்ணையில் காணப்படும் பெரும்பாலான பாம்பு இனங்களின் விஷம் மருந்துகளாக மாற்றப் படுகிறது. டோங் டாம் பாம்புப் பண்ணைக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். 

மரக்கிளைகளை அலங்கரிக்கும் பாம்புகளின் அசாதாரண காட்சியைக் கண்டு கவருகிறார்கள். இந்த பண்ணை பார்வையாளர்களுக்கு இடமளிக்க பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த தோட்டத்தின் வீடியோக்களை பார்த்து அனைவரும் இது உண்மையா என்று ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

400-க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளை கொண்ட வியக்க வைக்கும் தோட்டம் !

பெரும்பாலான மக்களுக்கு இதுபோன்ற தோட்டம் இருப்பது குறித்து தெரியாது அல்லவா? இந்த தோட்டம் ஆராய்ச்சி நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக இது மாறி விட்டது.

12 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணை தோட்டத்தில் பல வகையான வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. 

நீரிழிவு நோயினை ஆரம்பத்திலேயே இனம் காண்பது எவ்வாறு?

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 பேர் பாம்பு கடித்து சிகிச்சை பெற இந்த பண்ணைக்கு வருகிறார்கள். ஆண்டிடோஸ் மருந்துக்காக இங்கு தினமும் ஆராய்ச்சி நடக்கிறது. பெரும்பாலான பாம்புகளின் விஷத்தை முறிக்க மருந்து தயாரித்துள்ளனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings