பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
வங்கதேசத்தில் நீண்ட காலம் அதிகாரம் மிக்க பொறுப்பில் இருப்பவர் என்ற பெருமையையும் இவருக்கே உள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்தார்.
பெண்களுக்கு உள்ளாடை போடுவதால் வரும் தழும்புகள் மறைய வேண்டுமா?
பின்னர் 2009 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வங்கதேச பிரதமராக உள்ளார். உலக அளவில் நீண்ட காலம் மக்களால் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பில் இருக்கும் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கே உள்ளது.
பங்களாதேஷின் பிரதமர் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது முறையாக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது கட்சி பிரதான எதிர்க்கட்சியான பி.என்.பி யிடமிருந்து 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
அத்துடன், பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 152 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
1947 ஆம் ஆண்டு பிறந்த ஷேக் ஹசீனாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்தியாவுடனும் நெருக்கமான உறவையே ஷேக் ஹசீனா கையாண்டு வருகிறார்.
பிரசவத்திற்கு பின் மாதவிடாய் சுழற்சியில் தாமதம் ஏற்படுவது ஏன்?
இதனால், ஷேக் ஹசீனாவின் வெற்றி இந்தியா - வங்காளதேசம் இடையேயான உறவுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.
வங்கதேசத்தை பொறுத்தவரை இந்தியாவின் மிசோரம், திரிபுரா, மேகாலயா, அசாம், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.
Thanks for Your Comments