இந்தியாவின் கோடீஸ்வர யாசகர்... ஆண்டு வருமானம் 9 லட்சம் !

0

சிலர் யாசகர்களை கடந்து செல்வார்கள், சிலருக்கோ யாசகர்கள் என்றாலே பிடிக்காது. காரணம், யாசகர்கள் பொதுவாக யாசகம் எடுக்கும் தொழிலை வாழ்வாதாரமாக மாற்றிக் கொண்டு காலத்தைக் கடத்துகிறார்கள் என்று கூறுகின்றனர். 

இந்தியாவின் கோடீஸ்வர யாசகர்... ஆண்டு வருமானம் 9 லட்சம் !
ஆனால், இயலாத சிலருக்கோ அந்த பணம் தான் உணவு தருகிறது, சிலர் அந்த பணத்தில் குடும்பத்தையும் நடத்துகிறார்கள். முதலீடு இல்லை. உடலுக்குக் கடின உழைப்பு இல்லை. 

அதனால் தான் பலர் யாசகம் பெறுவதை இப்போது ஒரு தொழிலாக மாற்றுகிறார்கள் என்ற பார்வை நிலவுகிறது.

ஆணுறுப்பு தோலை தவறான முறையில் நீக்கியதால் 5 மாத குழந்தை பலி !

1 லட்சம் ரூபாய் பணம் உயிரிழந்த யாசகர்

குஜராத் மாநிலம், வல்சாட் என்ற இடத்தில் அங்குள்ள நூலகம் ஒன்றுக்கு அருகில் சாலையோரம் இரண்டு நாள்களாக யாசகர் ஒருவர், நடக்க முடியாமல் படுத்துக் கிடந்தார். 

அருகிலுள்ள கடைக்காரர் இதைப் பார்த்து விட்டு, இது குறித்து 108-க்கு போன் செய்து தகவல் கொடுத்தார். உடனே மருத்துவ ஊழியர்கள் ஆம்புலன்ஸில் வந்து, அந்த யாசகரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். 

மருத்துவ மனைக்குக் கொண்டு வந்ததும் டாக்டர்களிடம்,, யாசகர் தேநீர் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அவரைப் பார்க்க பல நாள்கள் சாப்பிடாமல் இருந்தது போல் தெரிந்தது.

உடனே அவருக்கு டாக்டர்கள் சாலைன் ஏற்றினர். ஆனால், அவர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் இறந்து போனார். 

இது குறித்து டாக்டர் கிருஷ்ணா படேல் கூறுகையில், நோயாளி பல நாள்கள் சாப்பிடாமல் இருந்திருப்பார் போல் தெரிகிறது என்றார். 

இறந்து போன யாசகர் அணிந்திருந்த சட்டை மற்றும் ஸ்வட்டர் பாக்கெட்களில் சிறிய சிறிய பிளாஸ்டிக் பேக்குகளில் பணத்தை அடைத்து வைத்திருந்தார். 500 ரூபாய் நோட்டுகள் மட்டும் 38 இருந்தன.

இந்தியாவின் கோடீஸ்வர யாசகர்... ஆண்டு வருமானம் 9 லட்சம் !

இது தவிர 200 ரூபாய் நோட்டுகள் 83 இருந்தன. அதோடு 100, 20, 10 ரூபாய் நோட்டுகள் 537 இருந்தன. அவை மொத்தம் 1.14 லட்சம் இருந்தது. 

யாசகர் சம்பாதித்தும், சாப்பிடப் பயன்படுத்தாமல் வைத்திருந்த பணத்தை டாக்டர்கள் உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

அந்த வகையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் கொடுக்கும் பணத்தில் ஒரு யாசகர் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? 

அத்துடன் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை வாடகைக்கு எடுத்து வணிக வளாகங்களையும் கட்டி இந்தியாவின் பணக்கார யாசகராக மாறியுள்ளார். 

ஒரே மாசத்துல தொப்பையை குறைக்க, இதோட சேர்த்து சாப்பிடுங்க !

மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின் என்ற யாசகரை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். நீண்ட காலமாக யாசகம் பெற்றுவந்த பாரத் ஜெயின், தற்போது சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். 

ஒரு வார்த்தையில் கூற வேண்டுமானால், அவர் தற்போது இந்தியாவின் கோடீஸ்வர யாசகர். பாரத் ஜெயினுக்கு திருமணமாகி, இரண்டு மகன்கள், மனைவி, சகோதரர், தந்தையுடன் வசித்து வருகிறார். 

தினமும் யாசகம் பெற்று வந்த பாரத் ஜெயின், தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்காக தான் யாசகம் பெற்று சேர்த்த பணத்தில் ஸ்டேஷனரி கடை ஒன்றை நிறுவினார். 

இதன் மூலம் யாசகம் கிடைத்த பணத்தில் தன் குடும்பத்தை நல்லபடியாக அமைத்துக் கொண்டது மட்டுமின்றி பெருந்தொகையையும் சம்பாதிக்க தொடங்கினார். 

மொத்தத்தில் பாரத் ஜெயின் சொத்து மதிப்பு தற்போது ரூ. 7.5 கோடி என கூறப்படுகிறது. யாசகம் பெற்று மாதந்தோறும் ரூ. 75 ஆயிரம் சம்பாதிக்கிறாராம் பாரத் ஜெயின். 

இதனால் அவரது மொத்த ஆண்டு வருமானம் ரூ. 9 லட்சம். இந்த நபர் மும்பையில் யாசகம் பெற்று பங்களா ஒன்றையும் கட்டியுள்ளார். கடைகளை வாங்கியுள்ளார். 

தனது மகன்கள் கான்வென்ட் பள்ளியில் படித்து வருவதாகவும் பாரத் ஜெயின் கூறியுள்ளார். மேலும், பாரத் ஜெயினுக்கு ரூ. 7.5 கோடி மதிப்புள்ள சொத்து மட்டுமின்றி, மும்பையில் 2 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் ஒன்றும் உள்ளது. 

இந்தியாவின் கோடீஸ்வர யாசகர்... ஆண்டு வருமானம் 9 லட்சம் !

இது தவிர தானே-வில் இரண்டு கடைகள் வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய். கோடீஸ்வரராக மாறியதால், யாசகம் பெறுவதை நிறுத்தி விடுமாறு அவரது குடும்பத்தினர் பலமுறை கூறியும், அவர் மறுத்து வருகிறாராம். 

தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த யாசகத்தை விட முடியாது என்கிறாராம் பாரத் ஜெயின். இந்தியாவில் யாசகம் பெற்று பணக்காரர்கள் ஆனவர்கள் பலர் உள்ளனர். 

அட வீட்ல யாருங்க.. கொஞ்சம் பாருங்க... ஆஹா.. ஓட்டம் பிடித்த மக்கள் !

கொல்கத்தாவைச் சேர்ந்த லட்சுமி 16 வயதில் யாசகம் பெற தொடங்கி, கடந்த 30 ஆண்டுகளில் பல லட்ச ரூபாய் குவித்துள்ளார். இதே போல் மும்பையை சேர்ந்த கீதா சர்னி என்பவர் சாலையில் யாசகம் பெற்றே சொந்தமாக அப்பார்ட்மெண்ட் வாங்கி யுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings