ஆர்தர் உர்ஸோ பிரேசில் நாட்டை சேர்ந்தவர். மாடலிங் துறையில் இயங்கி வரும் இவருக்கு மொத்தம் 9 மனைவிகள் இருந்தனர். 9 மனைவிகளுடனும் அமைதியான வாழ்க்கையை நடத்தி வந்தார் ஆர்தர்.
இது குறித்து ஆர்தர் பேட்டியளிக்கும் போது, அகதாவின் முடிவு தனக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகக் கூறினார்.
அத்துடன் அகதா தான் மட்டும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என நினைப்பதாகவும் இதனால் அவர் பலதார மண வாழ்கையில் இருக்கும் சந்தோஷத்தை இழப்பதாகவும் ஆர்தர் கூறியுள்ளார்.
மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும் உணவுகள்
அகதாவோ தான் ஒரு தார மண வாழ்க்கையில் ஈடுபடும் உயரிய முடிவை எடுத்துள்ளதாகவும், பல தார வாழ்க்கை இனியும் மகிழ்ச்சியாக இல்லை எனவும் கூறியுள்ளார்.
அகதா விவாகரத்து குறித்து ஒற்றுமையாய் இருக்கும் ஆர்தரின் மற்ற எட்டு மனைவிகள், பலதார மண வாழ்வில் இருக்கும் உணர்வுப் பூர்வமான மகிழ்ச்சியை அகதா உணரவில்லை.
சாகச உணர்வுக்காக மட்டும் அவர் பலதார திருமணம் முடிவை எடுத்திருந்திருக்கிறார் எனக் கூறியுள்ளனர். ஆர்தர் தனது மண வாழ்வை லூயானா கஸாகி என்ற பெண்ணுடனே தொடங்கினார்.
காதல் சுதந்திரமான உணர்வு அதனை ஒருதார மண வாழ்வில் அடக்கிவிட முடியாது என்பதை வெளிக்காட்டவும், பல தார மணவாழ்வு தவறானதில்லை என்பதை உரைக்கவும் 2021ல் அடுத்தடுத்து 8 திருமணங்கள் செய்து கொண்டார் ஆர்தர்.
பெண்கள் அந்தரங்க தகவலை யாரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் தெரியுமா?
ஆர்தரின் முதல் மனைவி லூயானவுக்கு மட்டும் ஒரே ஒரு பெண் குழந்தை உள்ளது, மற்ற அனைத்து மனைவிகளும் தலா ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஆர்தரின் விருப்பம் எனத் தெரிவித்திருக்கிறார்.
Thanks for Your Comments