பேஸ்ட் வாங்கும் போது இத கவனிங்க... புற்றுநோய் வரலாம் !

0

காலையில் எழுந்ததும் அனைவரும் தவறாமல் பற்களைத் துலக்குவோம். அப்படி பற்களைத் துலக்க பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள் தான் டூத் பேஸ்ட்.

பேஸ்ட் வாங்கும் போது இத கவனிங்க... புற்றுநோய் வரலாம் !
ஒரு மாதத்தில் நாம் எதை வாங்குகிறோமோ இல்லையோ, தவறாமல் டூத் பேஸ்ட்டை வாங்குவோம். 

இந்த டூத் பேஸ்ட் நமது வாய் மற்றும் பற்களில் உள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி வாயை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

சமீப காலமாக உலகில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. 

நாம் உண்ணும் உணவுகள் முதல் நாம் பயன்படுத்தும் ஒருசில பொருட்கள் வரை எது வேண்டுமானாலும் புற்றுநோய்க்கு காரணியாக இருக்கலாம். அதில் ஒன்று தான் டூத் பேஸ்ட். என்ன ஆச்சரியமாக உள்ளதா?

ஆம், நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மூலமாகவும் புற்றுநோய் வர நிறைய வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் டூத் பேஸ்ட்களில் உள்ள குறிப்பிட்ட கெமிக்கல்கள் தான். 

குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்த பின்பும் வருவது ஏன்?

இந்த கெமிக்கல்களை நீண்ட காலமாக பயன்படுத்தும் போது, அவை புற்றுநோயை உண்டாக்குகின்றன. இப்போது டூத் பேஸ்ட்டில் எந்த மாதிரியான கெமிக்கல்கள் இருந்தால் வாங்கக் கூடாது என்பதைக் காண்போம்.

செயற்கை இனிப்புகள் மற்றும் ப்ளேவர்கள்

பேஸ்ட் வாங்கும் போது இத கவனிங்க... புற்றுநோய் வரலாம் !

பொதுவாக சாக்கரின் போன்ற சில சேர்க்கைகள் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், புற்றுநோய்க்கான சாத்தியத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. 

பழைய ஆராய்ச்சி ஒன்றில், சாக்கரின் புற்றுநோயை உண்டாக்குவதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. 

அஸ்பார்டேம் குடல் பாக்டீரியா மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீர்குலைத்து, இன்சுலின் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

குள்ளமாக இருந்தால் உடல் எடையைக் குறைக்க முடியாது ஏன் தெரியுமா?

டீத்தனோலமைன் (DEA)

டீத்தனோலமைன் என்னும் பொருள் தான் டூத்பேஸ்ட்டில் நுரையை உருவாக்குகின்றன. 1998 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டீத்தனோலமைனை விலங்குகளின் மேல் தடவி வந்ததில், அவற்றிற்கு புற்றுநோய் வருவது கண்டுபிடிக்கப் பட்டது. 

அதே ஆய்வில் டீத்தனோலமைன் உடலில் உள்ள ஹார்மோன்களிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டறிப்பட்டது. எனவே இந்த டீத்தனோலமைனை உணவுப் பொருட்களை சேர்ப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது.

ட்ரைக்ளோசன்

பேஸ்ட் வாங்கும் போது இத கவனிங்க... புற்றுநோய் வரலாம் !

ப்ரைக்ளோசன் ஒரு ஆன்டி-மைக்ரோபியல் பொருள். இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. 

மேலும் இது டூத் பேஸ்ட், சோப்புகள் மற்றும் காஸ்மெடிக் பொருட்களில் பயன்படுத்த FDA-வால் அங்கீகரிக்கப்பட்ட இரசாயன கலவை ஆகும்.

ஆனால் ஆய்வுகளில் இந்த ட்ரைக்ளோசனை நீண்டகாலமாக பயன்படுத்தி வந்தால், அது உடலில் உள்ள பல ஹார்மோன்களின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அதுவும் இந்த கெமிக்கல் பெண் செக்ஸ் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் முதல் தைராய்டு ஹார்மோன்கள் வரை அனைத்தின் செயல் பாடுகளையும் பாதித்து, மெதுவாக பல உறுப்புக்களின் செயல் பாடுகளையும் செயலிழக்கச் செய்து பலவிதமான புற்று நோய்களைத் தூண்டக்கூடும். 

முக்கியமாக இந்த கெமிக்கலானது தோல் புற்றுநோயின் அபாயத்தைத் தான் அதிகரிக்கிறது. எனவே இந்த கெமிக்கல் உள்ள டூத் பேஸ்ட்டை பயன்படுத்தாதீர்கள்.

பாராபென்கள்

பேஸ்ட் வாங்கும் போது இத கவனிங்க... புற்றுநோய் வரலாம் !

பாராபென்கள் டூத் பேஸ்ட் போன்ற பல்வேறு காஸ்மெடிக் பொருட்களில் ஆயுளை நீடிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும், இவை ஈஸ்ட்ரோஜெனின் செயல்பாட்டை சீர்குலைப்பதோடு, மார்பக புற்றுநோயின் அபாயத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எனவே இந்த பாராபென்கள் நிறைந்த டுத் பேஸ்ட்டை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.

எனவே நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று விரும்பினால், அடுத்தமுறை டூத் பேஸ்ட் வாங்க செல்லும் போது, மேலே கெடுக்கப் பட்டுள்ள கெமிக்கல்கள் உள்ளதா என்பதை பார்த்து, ஒருவேளை இருந்தால், அந்த மாதிரியான டூத் பேஸ்ட்டை வாங்காதீங்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings