கணவருடன் விடுமுறையைக் கொண்டாடி மலை மீது ஏறி யோகா.. அமலா பால் !

0

தனது கணவருடன் விடுமுறையைக் கொண்டாடி வரும் அமலா பால்,  கர்ப்பமாக இருக்கும் நிலையில், மலை மீது ஏறி யோகாசனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார்.

கணவருடன் விடுமுறையைக் கொண்டாடி மலை மீது ஏறி யோகா.. அமலா பால் !
அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிந்து சமவெளி படம் தொடங்கி ஆடை படம் வரை சர்ச்சைகளுடனே வலம் வருபவர். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார். 

நடிகை அமலா பால் முதலில் இயக்குனர் ஏ.எல். விஜய்யை திருமணம் செய்து கொண்டார். பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக 2017-ம் ஆண்டு முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

விவாகரத்துக்குப் பிறகு, சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய அமலா பால், தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில், தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

ஏன் இரவில் தூங்க வேண்டும்? காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர். கடந்த ஆண்டு நவம்பரில் ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

கணவருடன் விடுமுறையைக் கொண்டாடி மலை மீது ஏறி யோகா.. அமலா பால் !

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அமலா பால், தனது கணவருடனான மகிழ்ச்சியான தருணங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்து வருகிறார். 

அண்மையில், தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நடிகை அமலா பால், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். 

அமலா பால் விடுமுறையை தனது கணவருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார். கர்ப்பாமாக இருக்கும் நடிகை அமலா பால் உயரமான மலை மீது ஏறி பாறை ஒன்றில் யோகாசனம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

குளிர்ச்சியான அறையில் தூங்குவது நல்லதா தெரியுமா?

இந்த வீடியோ குறித்து அமலா பால் குறிப்பிடுகையில், கர்ப்ப காலத்தில் மலை ஆசனம் அழகாக இருக்கிறது. இந்த யோகாவை இடுப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு மந்திரமாக கருதுகிறேன்.

கணவருடன் விடுமுறையைக் கொண்டாடி மலை மீது ஏறி யோகா.. அமலா பால் !

நீண்ட கடற்கரையில் உடற்பயிற்சி செய்வது. சூரிய அஸ்தமனத்தை வெறுங்காலுடன் பார்ப்பது, கர்ப்ப நேரத்தில் ஏற்படும் குமட்டலுக்கு சிறந்த சிகிச்சையாக இருக்கும். 

எனது கால்கள் மணலையும், உப்பு நீரையும் தொடும் போது அதை ஒரு அதிசய மருத்துவ குணமாக கருதுகிறேன். 

மேலும் அவர் யோகாவை செய்வதற்கு முன்பாக மருத்துவரை அணுகி அவருடைய ஆலோசனையையும் பெற்றுக் கொள்ள வேண்டும். என்று குறிப்பிட்டுளார். 

நடுங்கும் வகையில் எகிப்தியர்கள் செய்த வெறித்தனமான விஷயங்கள் ! 

அதுமட்டுமல்ல, அமலா பால் மற்றும் அவருடைய கணவர் ஜெகத் தேசாய் இருவரும் நீச்சல் குளத்தில் குளிக்கும் ரொமாண்டிக்கான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings