ஆணின் விரைகளில் ஏற்படும் நோய்கள் தெரியுமா?

1 minute read
0

விரைப்பை புற்றுநோய் - விரைப்பை பெரிதாவது அல்லது கட்டி போல காணப்படுவது தான் இதன் முதல் அறிகுறி. வழக்கமாக 40 வயதுக்கு மேல் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. 

ஆணின் விரைகளில் ஏற்படும் நோய்கள் தெரியுமா?
கிரிப்டோசிடிசம் - இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு பிறப்பிலேயே விரைப்பை இறக்கம் இல்லாமல் இருக்கும். சில நேரங்களில் விரைகள் முழுமையாக விரைப்பைக்குள் வராமல் போகலாம். 

இப்பிரச்சினை ஏற்படும் 20 சதவீதமானவர்களுக்கு முதல் சில மாதங்களிலே சரி செய்து விடலாம். மற்றவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும். டெஸ்ட்டிக்குலார் டார்ஸன் - விரைப்பைக்குள் விரை முறுக்கிக் கொண்டு, ரத்த விநியோகத்தை தடுக்கும் பாதிப்பு இது. 

இதற்கு உடனடி அறுவைச் சிகிச்சை அவசியம். ஹெர்னியா- இந்த பாதிப்பு ஏற்படும் போது குடல், அடிவயிற்றுச் சுவரைத்தாண்டி இன்கினல்கெனாலுக்குள் தள்ளப்படும். 

குடலை வெளியே தள்ளி, துவாரத்தைச் சிறிதாக்க அவசர அறுவைச் சிகிச்சை தேவைப்படும். வெரிக்கோசில்- இது விரைகளின் நரம்புகளில் ஏற்படும் பாதிப்பால் உருவாகிறது. 

வழக்கமாக இடது விரையில் இது காணப்படும். கடுமையாக இருந்தால் அறுவை செய்ய வேண்டும். ஆண்கள் குஞ்சு மணியால் எவ்வளவு சிரமப்படுகின்றார்கள்
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 15, April 2025
Privacy and cookie settings