இந்தியாவில் நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன. ஆனால் அதே அளவுக்கு தொழில்நுட்பங்கள் மூலம் நடக்கும் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தி ருக்கின்றன.
குண்டலஹல்லி பகுதியில் வாடகைக்கு ரூம் எடுத்து வசித்து வரும் இவர், சில நாட்களுக்கு முன்னர் ஒரு ஆபாச விளம்பரத்தை பார்த்து,
பாலியல் தொழிலாளியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஆனால் அந்த பக்கம் யாரும் ஃபோனை எடுக்கவில்லை. அதற்கு பதிலாக இளைஞரின் வாட்ஸ்அப் கணக்கிற்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது.
அதில், 2 மணி நேரம் உல்லாசமாக இருக்க ரூ.4000 வரை செலவாகும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை நம்பி முதல்கட்டமாக ரூ.4000ஐ அனுப்பியுள்ளார் இளைஞர்.
இளைஞர் அந்த இடத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால், எந்த வீடு என சரியாக தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார். உடனே அவரது செல்போனுக்கு மற்றொரு மெசேஜ் வந்திருக்கிறது.
அதில், பாலியல் தொழிலாளியின் பாதுகாப்புக்காக ரூ.11,000 செலுத்த வேண்டும் என்று கூறிப்பட்டிருக்கிறது. இளைஞர் அந்த தொகையை அனுப்பியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து ரூம் வாடகை உள்ளிட்ட மற்ற விவகாரங்களுக்கு ரூ.25,000 கட்ட சொல்லி யிருக்கிறார்கள். இளைஞரும் மூன்றாவது முறையாக இந்த தொகையை அனுப்பியுள்ளார்.
இப்படியே ரூ.48,500 வரை கொடுத்திருக்கிறார். ஆனால் கடைசி வரை பாலியல் தொழிலாளியை பார்க்க முடியவில்லை. அதன் பின்னர் தான் தனக்கு விபூதி அடிக்கப் பட்டிருக்கிறது என்பதை இளைஞர் உணர்ந்திருக்கிறார்.
உடனடியாக இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
முகம் தெரிந்த, நன்கு பழகிய ஆட்களிடத்திலேயே பணம் கொடுக்கும் போது அது திரும்ப கிடைப்பதில்லை. இப்படி இருக்கையில், யார் என்றே தெரியாத நபர்களிடம் பணம் கொடுக்க இளைஞர் முன் வந்திருக்க கூடாது.
சம்பந்தப்பட்ட கூகுள் பே நம்பர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப் படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
Thanks for Your Comments