கடலில் விமானம் விழுந்து பிரபல நடிகர் குடும்பத்துடன் பலி !

0

கிழக்கு கரீபியனில் உள்ள தனியார் தீவுக்கு புத்தாண்டு கொண்டாட சென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் (Christian Oliver) விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. 

கடலில் விமானம் விழுந்து பிரபல நடிகர் குடும்பத்துடன் பலி !
தனது இரண்டு மகள்களுடன் கிழக்கு கரீபியனில் உள்ள பெக்கியாவிற்கு அருகில் உள்ள தனியார் தீவான பெட்டிட் நெவிஸ் தீவுக்கு புத்தாண்டு கொண்டாட சென்றிருந்த போது இந்த விபத்து நேரிட்டுள்ளது. 

விபத்து தொடர்பான தகவல்களை செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் காவல் துறையினர் உறுதி செய்தனர்.

விமானம் செயின்ட் லூசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிலையில் விபத்தை சந்தித்தது என்ற தகவல் உறுதியானது. 

முன்னதாக அந்தப் பகுதியில் உள்ள மீனவர்கள் விபத்து பற்றி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்த பிறகே இந்த விபத்து சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. 

51 வயதான நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர் உடன் அவரது இரு மகள்களான மடிதா க்ளெப்சர் (10) மற்றும் அன்னிக் கிளெப்சர் (12) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 

விபத்து நடந்த போது, ​​விமானம் வானத்தில் இருந்து கடலில் விழுந்ததை கரீபியன் தீவுகளில் சிலர் கேமராவில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும், விபத்துக்குப் பிறகு உதவிக்கு வந்த குழுவினர் கிறிஸ்டியன் ஆலிவரின் உடலை கடலில் இருந்து வெளியே எடுத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விபத்தில் உயிரிழந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர், அவரது மகள்கள் மற்றும் விமானிக்கு பலரும் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இச்சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் பலர் தெரிவித்துள்ளனர். கிறிஸ்டியன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் புகைப்படமும் வைரலாகிறது.

அவர் புத்தாண்டு தினத்தன்று கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, அனைவருக்கும் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கட்டும் என்று வாழ்த்தியது தான் அவருடைய கடைசி வாழ்த்தாக மாறிவிட்டது.

நடந்தது என்ன?

விசாரணை அதிகாரிகளின் தகவலின்படி, புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன் பிறகு விமானம் நேரடியாக கடலில் விழுந்து நொறுங்கியது.

51 வயதான கிறிஸ்டியன் ஜெர்மனியை சேர்ந்தவர். கிறிஸ்டியன் உண்மையான பெயர் கிறிஸ்டியன் க்ளெப்சர். இந்த விபத்தில் கிறிஸ்டியனின் 10 வயது மகள் மதிதா மற்றும் 12 வயது மகள் அனிக் ஆகியோரும் உயிரிழந்தனர். 

விபத்துக்குள்ளான விமானத்தின் உரிமையாளர் மற்றும் விமானி பூர்வீக அமெரிக்கராஅ ராபர்ட்டும் இந்த விபத்தில் உயிரிழந்தார்.  

ஜெர்மனியில் பிறந்த கிறிஸ்டியன் ஆலிவர், 2006 ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் உலகப் போர் பற்றிய திரைப்படமான தி குட் ஜெர்மன், 2008 ஆம் ஆண்டு வெளியான ஸ்பீட் ரேசர், இந்தியானா ஜோன்ஸ், டயல் ஆஃப் டெஸ்டினி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings