HIV ரத்தத்தை செலுத்திய கணவன்.. என்ன நடந்தது? கொடுமை !

0

குஜராத் மாநிலம் சூரத்தில், பிரிந்து சென்ற மனைவி தன்னிடம் திரும்ப மறுத்ததால், ஹெச்ஐவி பாதித்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.

HIV ரத்தத்தை செலுத்திய கணவன்.. என்ன நடந்தது? கொடுமை !
சங்கர் காம்ப்ளே என்பவர் அவரது முன்னாள் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். டிரைவராகப் பணியாற்றிய சங்கருக்கு திருமணமாகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. 

ஆனால் மனைவி மீது சந்தேகப்பட்டு சண்டப் போட்டு வந்ததில் இருவரும் திருமணம் உறவை முறிந்து கொண்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்ததாகவும் போலீசார் கூறினர்.

இருப்பினும், சங்கர் மனைவி பிரிவை ஏற்க முடியவில்லை என மீண்டும் தன்னுடன் வாழ வருமாறு வற்புறுத்தி யுள்ளார். 

ஆனால் அந்த பெண், வர மறுக்கவே அவரை சங்கர் பழிவாங்க திட்டமிட்டு, மீண்டும் ஒரு முறை சந்திக்கும்படி கேட்டுள்ளார்.

ஒன்றாக மதிய உணவு சாப்பிட்ட பிறகு, சங்கர் தனது முன்னாள் மனைவியை ஒரு தனிமைப் படுத்தப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் தன்னிடம் வரும்படி கேட்டுக் கொண்டார்.

அவர் மறுத்ததால், சங்கர் அவளைக் கட்டிப்பிடித்து, பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிரிஞ்சைப் பயன்படுத்தி அந்த பெண்ணுக்கு எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட இரத்தத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.

ஊசி போடப்பட்டதால் மயங்கி விழுந்த அந்த பெண், சுயநினைவுக்கு வந்த பிறகு போலீசை அணுகினார். பெண்ணின் புகாரின் அடிப்படையில், கணவர் கைது செய்யப்பட்டார்.

வெப்சீரிஸை பார்த்து இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டதாக அவர் காவல் துறையிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்கு எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் எப்படி வந்தது?

காவல்துறையின் கூற்றுப்படி, சங்கர் ஒரு மருத்துவ மனையின் எச்ஐவி வார்டில் இருந்து பாதிக்கப்பட்ட இரத்தத்தைப் பெற்றுள்ளார்.

அங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரிடமிருந்து பரிசோதனைக்காக மாதிரியை சேகரிக்கும் மருத்துவமனை ஊழியர் போல் நடித்து ரத்தத்தை சேகரித்துள்ளார்.

எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட இரத்தத்துடன் ஊசி போடப்பட்ட அந்த பெண் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings