விண்வெளியில் நடப்பது என்பது மிகவும் வித்தியாசமானது. விண்வெளி வீரர் ஆபத்துகளை எதிர்நோக்கி தான் இந்த நடையில் இறங்குகிறார்.
விண்வெளி நிலையத்தில் ஏற்படும் கோளாறுகளைச் சரி செய்வதற்கோ, புதிய கருவிகளைப் பொருத்தவோ, பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ளவோ விண்வெளி நடையை மேற்கொள்கிறார்கள் விண்வெளி வீரர்கள்.
வேலையின் தன்மையைப் பொறுத்து, விண்வெளி நடை பொதுவாக 5 முதல் 8 மணி நேரம்வரை மேற்கொள்ளப்படுகிறது. பூமியில் இருந்து கொண்டுவந்த கருவிகளைப் பொருத்துவதுதான் இந்த விண்வெளி நடையின் பிரதான நோக்கம்.
சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. காதலிக்காக கணவன் கொலை !
விண்வெளியில் எப்படி நடக்கிறார்கள்?
விண்வெளி நடையை மேற்கொள்வதற்கு முன்பு, விண்வெளி வீரர்கள் பல மணி நேரம் பயிற்சியை மேற்கொள்வார்கள். விண்வெளி நிலையத்திலிருந்து எந்த வழியே செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பர்.
விண்வெளி நடையின் போது விண்வெளி வீரர்களின் உடல் கயிறு மூலம் விண்கலத்துடன் இணைக்கப் பட்டிருக்கும். கயிறு இணைக்காமலும் விண்வெளி நடை மேற்கொள்ளப்படும்.
கயிறு கட்டாமல் விண்வெளி நடையில் இலக்கை விட்டுத் தவறினால், அவர்களது உடையில் இணைக்கப் பட்டிருக்கும் சிறிய ஜெட் பேக், அவர்களை விண்வெளி நிலையத்துக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிடும்.
விண்வெளி நடையில் சவால்கள்
விண்வெளி நடை மிகவும் சவாலானது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தண்ணீருக்கு அடியில் இருப்பது போல் விண்வெளி உடை வடிவமைக்கப் பட்டிருக்கும்.
விண்வெளிக்குச் செல்வதற்கு முன் விண்வெளி வீரர்கள் தண்ணீருக்கு அடியில் நடந்து பயிற்சி எடுப்பார்கள். நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் இதற்காகவே மிகப் பெரிய நீச்சல் தொட்டி அமைக்கப் பட்டிருக்கிறது.
நீருக்கு அடியில் பயிற்சி எடுத்திருந்தாலும் விண்வெளியில் நடப்பது எளிதல்ல. விண்வெளி வீரர்கள் தங்கள் பாதங்களில் ஒரு தட்டை இணைத்து, சிரமத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள்.
காது கேட்கும் திறனை பாதிக்கும் நோய்கள்
விண்வெளி உடையில் இணைக்கப் பட்டிருக்கும் குளிர்ச்சிக்காக வைக்கப் பட்டிருக்கும் திரவம், மிக வெப்பமாகவோ, குளிராகவோ மாறி விடும். விண்வெளி நிலையத்தில் சூரியக் கதிர்கள் நேரடியாக விழும். இதனைச் சமாளிக்க வேண்டும்.
நாம் பூமியில் ஆக்சிஜனை மட்டும் சுவாசிப்பதில்லை. நைட்ரஜனையும் சேர்த்து உள்ளே இழுக்கிறோம். ஆக்சிஜனைத் தவிர பிற வாயுக்கள் கழிவாக வெளியேறி விடுகின்றன.
தேங்காய் பால் சிக்கன் பிரியாணி செய்வது !
ஆனால், விண்வெளியில் ஆக்சிஜனை மட்டுமே சுவாசிக்க வேண்டிய சூழல். அதனால் உடலில் உள்ள நைட்ரஜன் விண்வெளி நடையின்போது குமிழ்களாக உடலில் தோன்றும். இதனால் தோள்பட்டை, முட்டி போன்ற இடங்களில் அதிக வலி உண்டாகும்.
Thanks for Your Comments