கேரளாவில் இருந்து லட்சத்தீவு செல்வது எப்படி?

0

நீங்கள் இரண்டு வழிகளில் லட்சத்தீவுகளை அடையலாம். ஒன்று- விமானம் மூலம், இரண்டாவது - கப்பல் மூலம். இந்த இரண்டு வழிகளுக்கும் நீங்கள் கேரளாவின் கொச்சி நகரத்திற்கு வர வேண்டும். 

கேரளாவில் இருந்து லட்சத்தீவு செல்வது எப்படி?
கொச்சியைத் தவிர வேறு எங்கிருந்தும் லட்சத்தீவுக்கு நேரடி விமானம் இல்லை. கொச்சியை அடைந்த பிறகு, விமானத்தில் லட்சத்தீவு செல்ல விரும்பினால், அகட்டி விமான நிலையத்திற்கு இங்கிருந்து விமானங்கள் கிடைக்கும். 


இந்த விமானத்தின் மூலம் பயணம் செய்தால் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகும். ஆனால் தற்போது வரை லட்சத்தீவுக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 

வைட்டமின் டி மாத்திரையால் சிறுநீரகக் கல் வரும்

இதன் அர்த்தம் நீங்கள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து உங்கள் பயணத்தை சரியாக திட்டமிட வேண்டும்.


பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கேரளா வழியாக லட்சத்தீவுக்கு பயணித்து வந்தார். அவர் லட்சத்தீவிற்கு சென்ற போது, கடலில் நீச்சல் அடித்து, கடற்கரையை ரசித்தார். 

இது பற்றிய புகைப்படங்கள், வீடியோக்களை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அதன் பின்னர் கூகுளில் இந்தியா முழுவதும் அதிகம் தேடப்படும் இடமாக லட்சத்தீவு மாறியது


விமானம் மட்டுமின்றி, கப்பல் மூலமாகவும் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு செல்லலாம். லட்சத்தீவு நிர்வாக இணையதளத்தின்படி, கொச்சியில் இருந்து அகட்டி மற்றும் பங்காரம் தீவுகளுக்கு விமானங்கள் உள்ளன. 


அகட்டியில் ஒரே ஒரு விமான ஓடுதளம் தான் உள்ளது. ஆன்லைனில் தேடினால், கொச்சியில் இருந்து அகட்டிக்கு செல்லும் விமானங்கள் மட்டுமே கிடைக்கும், அதுவும் குறைவாகவே இருக்கும். 


லட்சத்தீவு நிர்வாகத்தின் தகவல்படி, அக்டோபர் முதல் மே வரை அகட்டியிலிருந்து கவரட்டி மற்றும் காட்மட் வரை படகுகள் கிடைக்கும். மழைக் காலத்தில் அகட்டியிலிருந்து கவரட்டிக்கு ஹெலிகாப்டர் வசதி உள்ளது.


லட்சத்தீவுகள் (Lakshadweep) இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. 


கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. லட்சத்தீவுகள் கேரள உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது.


லட்சத்தீவு குறித்து பலரும் தேடி வருகிறார்கள். லட்சத்தீவு செல்வது எப்படி, லட்சத்தீவில் உள்ள கட்டுப்பாடுகள் என்ன என்று பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 

இதன் காரணமாக லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்வதற்கான விமான டிக்கெட் வரும் மார்ச் மாதம் வரை விற்றுத் தீர்ந்துள்ளது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட லட்சத்தீவு கேரளாவின் கொச்சி அருகே இருக்கிறது.

கடல் வழியாக லட்சத்தீவுக்கு செல்வது எப்படி?


நீங்கள் லட்சத்தீவுக்கு கடல் வழியாகச் செல்ல விரும்பினால், கொச்சி யிலிருந்து ஏழு பயணிகள் கப்பல்கள் புறப்படுகின்றன.


அவற்றின் பெயர்கள்:


எம்வி கவரட்டி


எம்வி அரேபியன் சி


எம்பி லக்ஷ்வதீப் சி


எம்வி லகூன்


எம்வி கோரல்ஸ்


எம்வி அமிண்டிவி


எம்வி மினிகாய்


இந்த பயணிகள் கப்பல்கள் மூலம் சென்றடைய 14 முதல் 18 மணி நேரம் ஆகும். நீங்கள் எந்த தீவுக்குச் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து பயண நேரம் மாறுபடும். 

பிரியாணிக்கு கொடுக்கும் சைட் டிஷால் நன்மையா? தீமையா?

இந்த கப்பல்களில் பயணம் செய்ய பல வகுப்புகள் உள்ளன. ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, பேக்-பங்க் வகுப்பு.


கடல் பயணம் செய்யும் போது சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம். அப்படிப் பட்டவர்களுக்காக கப்பலில் ஒரு மருத்துவரும் இருக்கிறார்.

லட்சத்தீவு நிர்வாகத்தின் கூற்றுப்படி, எம்வி அமிண்டிவி, எம்வி மினிகாய் கப்பல்களில் இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கும். 


மேலும் அந்த கப்பல்கள் பயணிகளை கொச்சியிலிருந்து லட்சத்தீவுக்கு ஒரே இரவில் அழைத்துச் செல்லும். சீசன் காலங்களில், அதிவேகப் படகுகளும் ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவுக்கு இயக்கப்படும்.


லட்சத்தீவில் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

கவரட்டி தீவு

லைட் ஹவுஸ்

ஜெட்டி தளம், மசூதி

அகட்டி

கட்மத்

பங்காரம்

தின்னகரா

மாலத்தீவுகளைப் போலவே லட்சத்தீவுகளிலும் வெள்ளை மணல் கடற்கரைகள் உள்ளன. இங்கு செல்ல மே முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் சிறந்த நேரம்.


இங்கு வெப்பநிலை 22 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். 


நீங்கள் லட்சத்தீவுகளை நன்றாக சுற்றிப் பார்க்க விரும்பினால், ஆறு முதல் ஏழு நாட்கள் போதுமானது.


லட்சத்தீவில் கிடைக்கும் உணவுகள் என்ன?

கேரளாவில் இருந்து லட்சத்தீவு செல்வது எப்படி?

நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால் சில பிரச்னைகள் இருக்கலாம். தேங்காய்ப்பால், வாழைப்பழ சிப்ஸ், பலாப்பழம் போன்ற சில உணவுகளை கண்டிப்பாக சாப்பிட்டு பார்க்க வேண்டும். 


அதே நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால் லட்சத்தீவு உங்களுக்கு ஒரு நல்ல இடமாக இருக்கும்.

லட்சத்தீவுக்கு செல்வது எப்படி? எவ்வளவு செலவாகும்?

கீழே குறிப்பிட்டுள்ள அசைவ உணவுகள் உங்களுக்கு கிடைக்கும்,


கவரட்டி பிரியாணி

ஸ்டெம் கறி

இறைச்சி ஊறுகாய்

இறால் மசாலா

கணவாய் பொரியல்

இதைத் தவிர்த்து பல வகையான கடல் உணவுகளும் கிடைக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings