நல்லபாம்பு, கட்டு விரியன் போன்ற பாம்புகள் நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்யும் நியூரோடாக்சின் வகை நஞ்சு உடையவை.
இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. நல்ல பாம்பு கட்டுவிரியன் ஆகியவற்றின் நஞ்சு நமது இரத்தத்தில் கலந்தவுடன் நமது மூளையின் கட்டளைகளை கடத்தி எடுத்துச் செல்கின்ற நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்.
மூளையில் இருந்து வரும் கட்டளைகளை ஏற்று செயல்படுத்தக் கூடிய ஏற்பிகள் (Receiptors) நஞ்சின் விளைவுகளால் அடைபடுவதால் மூச்சுத்திணறல், அவயவங்கள் செயலிழப்பு ஆகியன ஏற்படும்.
இறுதியில் இதயம் வலிப்பு ஏற்பட்டு மரணம் ஏற்படுத்தும். நஞ்சு எதிர்ப்பு மருந்து (Antivenin) செலுத்தப்பட்டால் மூடியிருக்கும் கட்டளை ஏற்பிகள் மீண்டும் திறக்கப் படுகிறது. நஞ்சின் விளைவுகளை சமநிலைப் படுத்துகிறது.
கண்ணாடி விரியன், சுருட்டை போன்ற பாம்புகளின் நஞ்சு இரத்தத்தில் பரவும் போது இது உடல் திசுக்களை அழிக்கிறது.எனவே தீண்டப்பட்ட பகுதியில் வீக்கம், தசை அழுகல், வலி, சிறுநீரக செயலிழப்பு ஆகியன நேரிட்டு மரணம் ஏற்படுத்தும்.
நஞ்சு எதிர்ப்பு மருந்து செலுத்தப் பட்டதும் இது பாதிக்கப்பட்ட திசுக்களை மீண்டும் சரிசெய்து சமநிலையாக்குகிறது.
இந்தியாவில் பெரிய நான்கு நான்கு (Big Four) நச்சுப் பாம்புகளின் நஞ்சுகளின் கலவையில் மிகமிகச் சிறிய அளவு நஞ்சு குதிரைகளுக்கு செலுத்தப்படும்.
இது அதன் இரத்தத்தில் பிறபொருளெதிரிகள் (Antibodies) உருவாக்கியதும் இரத்தம் வடிகட்டப்படும். இரத்த பிளாஸ்மா இதிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்பட்டு நஞ்சு முறி மருந்து தயாரிக்கப் படுகிறது.
வெளிநாடுகளில் ஒவ்வொரு வகையான பாம்புக்கும் தனித்தனி நஞ்சுமுறி மருந்து உள்ளது.
நஞ்சு முறி மருந்து அயல் பொருளிலிருந்து தயாரிக்கப்படுவதால் நமது உடலில் இது செலுத்தப்பட்டதும் நஞ்சு முறிவு ஏற்படுவதுடன் பக்க விளைவாக (Side Effects) பல்வேறு வகையான ஒவ்வாமைகளை (Alergies) நமக்கு ஏற்படுத்தும்.
பாதாம் வாங்கனும்னா? இப்படி வாங்குங்க? இல்லனா காசு வேஸ்ட் !
எனவே ஒவ்வாமைகளை இனம் கண்டு இதற்குரிய மருந்துகளும் உடனுக்குடன் செலுத்தப்படும். பாம்பு தீண்டலுக்கான நஞ்சு முறி மருந்து செலுத்தி ஒருவரை குணமாக்குவது என்பது சிக்கல்கள் நிறைந்த மருத்துவமாகும்.
Thanks for Your Comments