லட்சத்தீவுக்கு செல்வது எப்படி? எவ்வளவு செலவாகும்?

0

வெள்ளை மணல் கொட்டிக் கிடக்கும் கடற்கரை, நீல நிற கடல் நீர், ஆர்ப்பாட்டமின்றி கரையைத் தொடும் அலைகள். இதைப் படிக்கும் போதே, ஒரு அழகிய கடற்கரையை காண வேண்டும் என மனதில் தோன்றலாம். 

லட்சத்தீவுக்கு செல்வது எப்படி? எவ்வளவு செலவாகும்?
கடற்கரைகளையும், கடலையும் விரும்பாதவர்கள் மிகவும் குறைவே. இந்தியாவில் அழகான கடற்கரைகளுக்கு பஞ்சமில்லை.


அதிலும், இந்த ஆண்டின் தொடக்கம் முதலே இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வரும் லட்சத்தீவுகளும், அழகான இந்தியக் கடற்கரைகள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடிக்கும். 


இந்தியாவின் தென்மேற்கில் உள்ள லட்சத்தீவு ஒரு யூனியன் பிரதேசம். 36 தீவுகளைக் கொண்ட இந்த இடம், அதன் கடற்கரை அழகுக்காக மாலத்தீவுடன் ஒப்பிடப்படுகிறது.

நெய் ஆபத்தானதா? தெரிந்து கொள்ளுங்கள்

நீங்கள் லட்சத்தீவு செல்ல நினைத்தால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். லட்சத்தீவுக்கு எப்படி செல்வது? எந்த வழியாக செல்வது வழி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்?, 

இதையெல்லாம் தெரிந்து கொள்ளும் முன் லட்சத்தீவு பற்றி சில அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.


லட்சத்தீவு பற்றிய அடிப்படைத் தகவல்கள்


கேரளாவின் கொச்சியில் இருந்து 440 கிலோ மீட்டர் தொலைவில் லட்சத்தீவு உள்ளது.

லட்சத்தீவு குழுவில் 36 சிறிய தீவுக் கூட்டங்கள் உள்ளன.


மொத்த மக்கள் தொகை சுமார் 64 ஆயிரம்.


சுமார் 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது லட்சத்தீவு.


பேசப்படும் மொழிகள் - மலையாளம் மற்றும் ஆங்கிலம்.


முக்கியமான தீவுகள்- கவரட்டி, அகட்டி, அமினி, கத்மட், கிலாடன், செட்லாட், பித்ரா, ஆண்டோ, கல்பானி மற்றும் மினிகாய்.


நிர்வாகத்தின் தகவல்படி, லட்சத்தீவில் 13 வங்கிகள், 13 விருந்தினர் மாளிகைகள், 10 மருத்துவ மனைகள் உள்ளன.


லட்சத்தீவை அடைவதற்கான அனுமதி பெறுவது எப்படி?


கேரளாவின் கொச்சிக்கு, இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் விமானம் அல்லது ரயிலில் செல்லலாம். நீங்கள் கொச்சியை அடைந்ததும் முதலில் செய்ய வேண்டியது லட்சத்தீவுக்குச் செல்ல அனுமதி பெறுவது தான்.


இந்தியாவில் இது போன்ற சில முக்கியமான, பாதுகாக்கப்பட்ட இடங்கள் உள்ளன. அங்கு செல்வதற்கு முன் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். லட்சத்தீவும் அப்படிப்பட்ட ஒரு இடம். 

லட்சத்தீவு நிர்வாகத்தின் அலுவலகம் கொச்சியில் உள்ள வில்லிங்டன் தீவு பகுதியில் உள்ளது. இங்கு சென்று அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்.


உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பே ஆன்லைனில் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.


விண்ணப்பிக்கும் போது, ​​பயண தேதி மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவற்றை யெல்லாம் 15 நாட்களுக்கு முன்னரே செய்து முடித்தால் நல்லது. 


அனுமதி கிடைத்த பிறகு, 30 நாட்களுக்கு அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் 300 ரூபாய். விமான நிலையத்தில் க்ரீன் டேக்ஸ் (Green Tax) எனப்படும் வரியையும் (ரூபாய் 300) செலுத்த வேண்டும். 

அதிசயம் நிறைந்த கைலாயம் மலை !

மற்றொரு வழி, லட்சத்தீவு நிர்வாகத்தின் இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். முதலில் இந்த விண்ணப்பத்தை கவனமாக நிரப்ப வேண்டும். 


பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அனுமதிப் பத்திரம் கிடைக்க நேரம் ஆகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுவது நல்லது.

லட்சத்தீவுக்கு செல்வது எப்படி? எவ்வளவு செலவாகும்?

உங்களின் அடையாளச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை உங்களுடன் வைத்திருக்கவும். 


இந்த அனுமதிப் பத்திரத்தை நீங்கள் லட்சத்தீவில் உள்ள காவல் நிலையம் அல்லது நிர்வாக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் ஒரு விஷயம், நீங்கள் ஸ்கூபா டைவிங் செய்ய அல்லது வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதற்கு சில கூடுதல் அனுமதிகளைப் பெற வேண்டியிருக்கும். 


இறுதியாக அனைத்து அனுமதிகளையும் பெற்றப் பிறகு, லட்சத்தீவுகளை நோக்கி உங்கள் பயணத்தை தொடங்கலாம்.

உலகில் எவராலும் ஏற முடியாத ஒரு சிகரம் !

லட்சத்தீவு செல்ல எவ்வளவு செலவாகும்?

லட்சத்தீவுக்கு செல்வது எப்படி? எவ்வளவு செலவாகும்?

முக்கியமான கேள்வி. லட்சத்தீவுக்கு எந்த சீசனில் செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும், எவ்வளவு நாட்களுக்கு முன்கூட்டியே திட்ட மிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தும் பயணத்திற்கான செலவு தீர்மானிக்கப்படும்.


மேலும், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விலைகள் உங்கள் பேரம் பேசும் திறனைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். 


முக்கியமான விஷயம், காகிதப் பணத்தை எடுத்துச் செல்லுங்கள். ஏடிஎம் அல்லது ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதில் நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும்.


உதாரணத்திற்கு, (12 ஜனவரி 2024 நிலவரப்படி) பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று சென்னையில் இருந்து கொச்சிக்கு விமான டிக்கெட்டின் விலை ரூபாய் 3000 மற்றும் கொச்சியில் இருந்து அகட்டிக்கு ரூபாய் 5500 என விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 


சென்னையில் இருந்து ரயில் டிக்கெட் 300 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. பேருந்துகள், சொந்த வாகனம் மூலமாகவும் செல்ல முடியும்.


நீங்கள் கொச்சியில் இருந்து கப்பல் மூலம் லட்சத்தீவுகளை அடைய விரும்பினால், பல தனியார் நிறுவனங்கள் டூர் பேக்கேஜ்களை வழங்குகின்றன. 


இரண்டு நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரையிலான பேக்கேஜ்களில் பல தீவுகளைச் சுற்றிப் பார்க்கலாம். இந்த பேக்கேஜின் விலை 15 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.


பங்காரத்தில் ஒரு காட்டேஜ் சுமார் ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து கிடைக்கும். மூவாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய்க்கு கட்மத்தில் அறை கிடைக்கும். 

லட்சத்தீவுக்கு செல்வது எப்படி? எவ்வளவு செலவாகும்?

அகட்டியில் தங்குவதற்கு ரூபாய் 1500 முதல் 3000 ஆகலாம். கவரட்டி தீவில் 11,000 ரூபாய்க்கு ஒரு ரிசார்ட்டில் அறை எடுக்கலாம்.


லட்சத்தீவில் 20 நிமிட ஸ்கூபா டைவிங் ரூபாய் 3,000க்கும், 40 நிமிட ஸ்கூபா டைவிங் சுமார் ரூபாய் 5,000க்கும் கிடைக்கும். ஸ்நோர்கெலிங் பேக்கேஜ்கள் ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்கும். 

கேரளாவில் இருந்து லட்சத்தீவு செல்வது எப்படி?

சராசரியாக ஒரு தீவுக்கான டூர் பேக்கேஜ் ஒரு நபருக்கு ஒன்றரை முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகும். ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவிற்கு கப்பலில் செல்கிறீர்கள் என்றால் அதற்கு நான்காயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை செலவாகும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings