ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை அழித்த கணவர்.. ஏலத்துக்கு வரும் அடுக்குமாடி குடியிருப்பு !

0

கர்நாடக இசைப் பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகளான நடிகை ஸ்ரீ வித்யா 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை அழித்த கணவர்.. ஏலத்துக்கு வரும் அடுக்குமாடி குடியிருப்பு !
தென்னிந்திய திரையுலகில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீ வித்யா. 

இவர் நடிகை என்பதையும் தாண்டி சிறந்த பாடகி.  ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த அவர் பின்னர் அம்மா ரோல்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

கேரளாவை சேர்ந்த இவர் 1976 ஆம் ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். 

நான்கு ஆண்டுகள் மட்டுமே இணைத்து வாழ்த்த இவர் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக 1980 யில் கணவரிடம் இருந்து விவாகரத்துப்பெற்று பிரிந்தார். 

1976ல் பெற்றோர் பார்த்து வைத்த ஜார்ஜ் தாமஸ் என்பரை திருமணம் செய்துக் கொண்டு சில வருடத்திலே அவரை பிரிந்து விட்டார். இவர் நடிகர் கமல் ஹாசனின் ஊரறிந்த காதலி. 

இந்நிலையில் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த ஸ்ரீ வித்யாவின் வாழ்க்கை சீரழிந்தது பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ள பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்,

நடிகை ஸ்ரீவித்யாவின் அம்மா பிரபல பாடகி என்பதால் நிறைய பணம் பார்த்தவர். அதனால் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த ஒரே மகள் ஸ்ரீவித்யா. 

ஆனால், ஸ்ரீவித்யா சினிமாவில் நுழைந்த பின்னர் சில தகாத உறவுகளால் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. எதிர்பார்த்த இல்லற வாழ்க்கை கிடைக்காமல் பலத்த ஏமாற்றமடைந்தார்.

அத்துடன் அவரது சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்ட கணவர் ஸ்ரீ வித்யாவின் மொத சொத்தையும் அழித்தார். 

ஸ்ரீ வித்யாவின் சொத்துக்களை அழித்த கணவர்.. ஏலத்துக்கு வரும் அடுக்குமாடி குடியிருப்பு !

பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடைசி காலகட்டத்தில் பைசா பணம் கையில் இல்லாமல் வறுமையில் வாடி இறந்தார் என கூறியுள்ளார் பயில்வான். 

இந்நிலையில் நடிகை ஸ்ரீ வித்யாவிற்க்கு சொந்தமாக சென்னை அபிராமபுரம் சுப்ரமணியபுரம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஏலம் மூலம் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1250 சதுர அடி கொண்ட இந்த பிளாட்டின் மதிப்பு ரூ. 1 கோடியே 14லட்சத்து 10ஆயிரம் என்று குறைந்த பட்ச விலை நிர்ணயித்து வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

ஸ்ரீ வித்யா கட்ட வேண்டிய வருமான வரி பாக்கி, வட்டி மற்றும் ஏலச்செலவு தொகையை வசூல் செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாக வருமான வரித்துறை மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது.  

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings