சவுதியில் மதுபான கடை... இஸ்லாமிய அடையாளம் மாறுகிறதா?

0

சௌதி அரேபியா ரியாத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மது விற்பனை செய்ய ஒரு கடையைத் திறக்கப் போவதாகக் கூறியுள்ளது. கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சௌதி அரேபியாவில் மது விற்கப்படுவது இதுவே முதல் முறை. 

சவுதியில் மதுபான கடை... இஸ்லாமிய அடையாளம் மாறுகிறதா?

ரியாத்தில் திறக்கப்படும் இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள்.

பல்வேறு நாடுகளின் தூதரக ஊழியர்கள பல ஆண்டுகளாக சீல் செய்யப்பட்ட மதுபானங்களை இறக்குமதி செய்து வருகின்றனர். அவை அரசுமுறை பேக்கேஜ்கள் என அழைக்கப் படுகின்றன.

தற்போது திறக்கப்படவுள்ள இந்த மதுபானக் கடையின் மூலம் சட்டவிரோத மது வியாபாரம் தடுக்கப்படும் என சௌதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சௌதி அரேபியாவில் கடந்த 1951ஆம் ஆண்டில், அரசர் அப்துல் ஆஸிஸின் மகன் மது அருந்துவது தொடர்பான சர்ச்சையில் பிரிட்டிஷ் தூதரக அதிகாரியை சுட்டுக் கொன்றார். 

அதிகாலையில் தவிர்க்க வேண்டிய தவறான பழக்கங்கள் !

அதைத் தொடர்ந்து 1952ஆம் ஆண்டு முதல் சௌதியில் மதுபானம் தடை செய்யப் பட்டுள்ளது. ஏ.எஃப்.பி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமைகள் பார்த்த ஆவணங்களின்படி, இந்தப் புதிய மதுக்கடை ரியாத்தின் தூதரக குடியிருப்பில் திறக்கப்படும்.

மதுபானம் விற்பனை செய்வதற்கான திட்டங்களைப் பற்றி நன்கு அறிந்த அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் இன்னும் சில வாரங்களில் கடை திறக்கப்படலாம் என்று தெரிவித்தனர்.

இருப்பினும், அந்தக் கடைக்குச் சில வரம்புகள் உள்ளன. அவை,

சவுதியில் மதுபான கடை... இஸ்லாமிய அடையாளம் மாறுகிறதா?

மதுபானம் தேவைப்படும் தூதரக அதிகாரிகள் அதற்கு முதலில் பதிவு செய்து, பின்னர் அரசிடமும் அனுமதி பெற வேண்டும். மதுக்கடைகள் 21 வயதுக்கு உட்பட்ட எவரையும் அனுமதிக்காது. 

அனைத்து நேரங்களிலும் தகுந்த உடை அணிந்திருக்க வேண்டும். மது அருந்துபவர்கள் வேறு யாருக்காகவும் மதுவை ஆர்டர் செய்ய முடியாது. அதாவது, ஒருவரது ஓட்டுநர் மூலமாக ஆர்டர் செய்வது போன்றவற்றைச் செய்யக்கூடாது.

செய்திகளின்படி, மதுபானம் வாங்குவதற்கு மாதாந்திர வரம்பும் இருக்கும். இருப்பினும், ஏ.எஃப்.பி செய்தி முகமை பார்த்த ஆவணங்களின்படி, இந்த வரம்புகள் கண்டிப்பானதாக இருக்காது என்றும் தெரிகிறது.

வாயில் வரும் வெண் புண்ணை சரிசெய்ய? இதை ட்ரை பண்ணுங்க !

பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 240 ‘புள்ளிகள்’ என்ற அளவில் மதுபானம் கிடைக்கும். ஆறு புள்ளிகளுக்கு ஒரு லிட்டர் ஸ்பிரிட்ஸ் என்ற கணக்கில் அளவிடப்படும். 

அதுவே ஒரு லிட்டர் ஒயின் மூன்று புள்ளிகளாகவும், ஒரு லிட்டர் பீர் ஒரு புள்ளியாகவும் கணக்கிடப்படும். சராசரி வெளிநாட்டினருக்கு மதுபானம் கிடைக்குமா அல்லது தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்குமா என்பது இன்னும் கூறப்படவில்லை. 

ரியாத்தின் தினசரி வாழ்வில் மதுபானம் இனி ஒரு பகுதியாக மாறும். ஆனால், மது அருந்துவோர் எங்கு குடிக்கிறார்கள், மது அருந்திய பிறகு எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதே அதில் மிக முக்கியமான விஷயம்.

சவுதியில் மதுபான கடை... இஸ்லாமிய அடையாளம் மாறுகிறதா?

தற்போது, சௌதி அரேபியாவில் மது அருந்துதல் அல்லது மதுவை வைத்திருத்தல் போன்ற செயல்களுக்கு, சிறைத் தண்டனை, பொதுவில் கசையடி வழங்குதல், அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டினரை நாடு கடத்துதல் ஆகிய தண்டனைகளை வழங்கும் சட்டம் அமலில் உள்ளது.

மதுபான கொள்கை பற்றிய புதிய ஆவணங்களின்படி, சௌதி நிர்வாகம் புதிய விதிகளை உருவாக்கி வருகிறது. 

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் ?

புதிய விதிகளின்படி, குறிப்பிட்ட அளவு மதுபானம் கொண்டு வர அனுமதிக்கப்படும். இதன் மூலம் கட்டுப்பாடற்ற மது விற்பனைகள் நிறுத்தப்படும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings