சில நபரை இன்ட்ரோவர்ட் என்று சொல்வது எதனால்? #Introvert

0

இப்போது, சமூக ஊடகங்களிலும் பொது வெளியிலும் Introvert என்ற வார்த்தையை அதிகம் கேட்கிறோம். பலரும் தங்களை இன்ட்ரோவர்ட் என்கின்றனர்.

சில நபரை இன்ட்ரோவர்ட் என்று சொல்வது எதனால்?
பொது வெளியில் பேசத் தயங்கும் கூச்ச சுபாவம் கொண்டவர்கள், சிலரிடம் மட்டும் பேசுவதை தவிர்ப்பவர்கள், இடம் காலத்தைப் பொறுத்து தனிமையை விரும்புபவர்கள் பலரும் தங்களை இன்ட்ரோவர்ட் என கூறிக்கொள்கின்றனர். 

ஆனால், இது உண்மையல்ல. இவற்றில் பல தவறான புரிதல்கள் உள்ளன என உளவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இவர்களை புரிந்து கொள்ளும் விதமாகவும் அவர்களுடைய தனித்த திறன்களை பாராட்டும் வகையிலும் தான் இந்த நாள் கடைபிடிக்கப் படுகிறது.

நடுங்க வைக்கும் அந்த கால மிருகத்தனமான கருக்கலைப்பு அதிர்ச்சி தகவல் !

யாரெல்லாம் இன்ட்ரோவர்ட், அவர்களின் தனிப்பண்புகள், தனித்திறமைகள் என்ன?, அப்படி இருப்பது ஒரு குறையா என்பதை இங்கு பார்ப்போம். 

பார்ட்டி சூழல் அவ்வளவாக பிடிக்காது, நிறைய மனிதர்கள் கூட்டத்தை கண்டு உற்சாகம் ஏற்படாது; மாறாக அந்த இடத்தை விட்டு தப்பித்து எப்படா போகலாம் என்றிருக்கும். 

உரையாடல்களை தொடங்குவதில் சில தயக்கங்கள்.., சில நெருங்கிய நட்பு வட்டங்களில் மட்டுமே உங்களால் கொண்டாட்ட மனநிலையில் இருக்க முடியும், தனிமையை கொண்டாடுவது, சுய அறிதல் இப்படியான குணங்கள் இருந்தால் இன்ட்ரோவர்ட்.

சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் கிருபாகர் இது குறித்த சில கேள்விகளுக்கு பதிலளித்தார். தான் நினைப்பதை வெளியில் சொல்லாமல் தனக்குள்ளேயே வைத்துக் கொள்வதை இன்ட்ரோவர்ட் என்று சொல்லலாம். 

ஆனால், வெளியில் பேசுவதற்கோ, எதையாவது செய்வதற்கோ தயக்கம், கூச்சம் உள்ளவர்கள் இன்ட்ரோவர்ட் அல்ல. புதியவர்களிடம் பேசுவதற்கு சிலருக்கு வெட்கமோ, தயக்கமோ இருக்கலாம். 

சிறிது நேரம் சென்றால் அவர்களாகவே இயல்பாகி பேசி விடுவர். இன்ட்ரோவர்ட் ஆக இருப்பவர்கள் எல்லோரிடமும் எல்லா நேரங்களிலும் அப்படித் தான் இருப்பார்கள். 

இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்கிறார் கிருபாகர். இன்ட்ரோவர்ட்டுக்கு மாறாக உரக்க பேசுபவர்கள், அனைவரிடமும் நன்றாக பழகுபவர்களை எக்ஸ்ட்ரோவர்ட் என ஆங்கிலத்தில் கூறுகிறோம்.

பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு இதுவும் காரணமா?

பெரும்பாலானோர் நினைப்பது போன்று இன்ட்ரோவர்ட் ஆக இருப்பது ஒரு குறையோ அல்லது மனநல பிரச்னையோ இல்லை என்கிறார், கிருபாகர். மாறாக, அப்படி இருப்பது ஒருவருடைய இயல்பான குணநலன் தான் என்கிறார் அவர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings