யாராவது இகழ்ந்து பேசினால், அவர்களை நீங்கள் இகழாதீர்கள் !

0
அவர்களுடைய இயலாமையால் தான் அப்படி ஒரு முடிவுக்கு செல்கிறார்கள். பதிலுக்கு நாமும் செய்தால் மரியாதை இருக்காது.
யாராவது இகழ்ந்து பேசினால், அவர்களை நீங்கள் இகழாதீர்கள் !
மாறாக, பலர் என்ன செய்கிறார்கள் தெரியுமா? திட்டியவரை எப்படி பழி தீர்த்துக் கொள்வது என்று, தங்களைத் தானே தரம் தாழ்த்தி பதில் விமர்சனம் செய்து பெருமை பட்டுக் கொள்கிறார்கள்.

நமது உடம்பில் ஒரு காயம் ஏற்பட்டால் என்ன செய்வோம்? சீக்கிரமே அந்த காயம் ஆற மருந்திடுகிறோம். ஆனால், மனம் காயப்பட்டால். அந்த காயத்தை ஆற விடாமல் தினமும் கீறிக் கொண்டே மனதை துன்புறுத்தி சித்ரவதை அனுபவிக்கிறோம்.
இதில் பலபேர் நமக்கு தினமும் சீண்டி அந்த புண்ணை ஆறாமல் கண்ணும், கருத்துமாக பார்த்து கொள்கிறார்கள்..??

தினமும் அந்த விஷயத்தை புதிதாக யாரிடமாவது சொல்லி நாமே நமது காயத்தை ஆற விடாமல் சீழ் பிடித்து புரையோட வைக்கிறோம்.
இனி அப்படி செய்யாதீர்கள். யாராவது திட்டினால் பதிலுக்கு புன்னகைத்து விடுங்கள். ஏற்கனவே பட்ட காயத்தை, மற்றவர்கள் தொடாமல் பார்த்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதே பெரிய கலை தான். மௌனம் தான் பல காயங்களுக்கு சிறந்த மருந்து.

மௌனம் மிகப்பெரிய சக்தி, உணர்ந்தவர்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும். நீங்களும் ஒருமுறை அதை சுவைத்து பாருங்கள். 

உங்கள் வாழ்க்கை பயணமே மாறி விடும். யாரிடமும் அளவோடு பேசுங்கள். அதிலும் தெரிந்ததை மட்டும் பேசுங்கள். இன்னும் முக்கியம். உண்மையை மட்டுமே பேசுங்கள்.
மனோதைரியம் கூடும். வருத்தங்கள், எதிர்ப்புகள், பழிகள் என்று உங்களை நீங்களே அழித்து கொள்ளாதீர்கள். ஒரு ரகசியம் சொல்கிறேன் கேளுங்கள். உங்களைத் தவிர வேறு யாரும் உங்களை அழிக்க முடியாது.
அதே போல் உங்களைத் தவிர வேறு யாரும் உங்களை காப்பாற்ற முடியாது....
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings