உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் மங்கோலிய அரசர் செங்கிஸ்கானின் நடுங்க வைக்கும் வரலாற்று பின்னணி குறித்து பார்க்கலாம்.
பல நாடுகளில் ரத்த ஆற்றை ஓடவிட்டு, எதிரிகளின் தலையை துண்டித்து, மலையாக குவித்த செங்கிஸ்கான், நகரங்களை சூறையாடிய படியே, பீஜிங் முதல் மாஸ்கோ வரை பல நகரங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
ஒரு காலத்தில் மூன்று கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரந்து விரிந்திருந்த மங்கோலியப் பேரரசின் தற்போதைய எல்லைக்குள் வசிப்பவர்களின் மொத்தத் தொகையே மூன்று கோடிதான்.
உலகில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ஆண்கள் அதாவது உலக ஆண்களில் 0.5% செங்கிஸ்கானின் பரம்பரையினர் என்று கூறுகிறது இந்த ஆராய்ச்சியின் முடிவுகள்.
பாகிஸ்தானில் ஹஜாரா பழங்குடியினப் பகுதியில் வசிக்கும் மக்களின் மரபணுக்களிலும் இதுபோன்ற தடயங்கள் தென்படுகின்றன.
அந்த மக்களும் தாங்கள் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்கள் என்றே தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.
இதைத் தவிர, முகல், சுக்தாய் மற்றும் மிர்ஸா போன்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட மக்கள் தாங்களும் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்களாக கூறுகின்றனர்.
செங்கிஸ்கானுக்கு 6 மனைவிகள் இருந்தனர். ஆனால் உடலுறவு என்பது எவ்வித தடையும் இல்லாமல் எண்ணற்ற பெண்களுடன் தொடர்ந்தது.
பெண்களில் பலரைத் தேர்ந்தெடுத்து உடலுறவு கொள்வார். கிட்டத்தட்ட 4 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்த செங்கிஸ்கான், ரஷ்யா, சீனா, ஈராக், கொரியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் இந்தியாவின் பகுதிகளை வென்றார்.
ஆயிரக்கணகான பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குறைந்தது 1000 பெண்கள் கருவுற காரணமாக இருந்திருக்கிறார்.
இதையடுத்து செங்கிஸ்கான் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது கல்லறை இருக்கும் இடம் இன்றும் அறியப்படாத மர்மமாகவே இருக்கிறது.
Thanks for Your Comments