இன்ட்ரோவர்ட் நபர்களின் திறமைகள் என்னென்ன?

0

கொஞ்ச காலங்களாகவே இன்ட்ரோவர்ட், எக்ஸ்ட்ரோவர்ட் என்ற வார்த்தைகளை நாம் அதிகம் பயன்படுத்த தொடங்கி யிருக்கிறோம். அவங்க அதிகமாக பேசமாட்டங்க, ரொம்ப அமைதியானவங்க. 

இன்ட்ரோவர்ட் நபர்களின் திறமைகள் என்னென்ன?
இப்படியான வார்த்தைகளை இன்ட்ரோவர்ட் குறிப்பிட பயன்படுத்தப்படும். 'Shy'  இன்ட்ரோவர்ட், Antisocial என்பது ஒன்றல்ல. Shyness உள்ளவர்கள் இன்ட்ரோவர்ட் அல்ல. 


இன்ட்ரோவர்ட் என்பவர்கள் தேவையான இடங்களில் தங்களது எண்ணங்களை முன் வைப்பார்கள். பெரும் குழு இருந்தாலும் தனித்து தன்னுலகில் இருப்பவர்கள். 


யாருடனும் பேச பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. மாறாக, இன்ட்ரோவர்ட் தங்களது எனர்ஜியை குறிப்பிட்ட குழுவுடன், தேவையான பொழுதுகளில் வெளிப்படுத்த விருப்பப்படுவர். 

காது கேட்கும் திறனை பாதிக்கும் நோய்கள்

அதுவும் அவர்கள் தேர்வாக இருக்கும். மேலும், பிறவியிலேயே இன்ட்ரோவர்ட் என யாரும் கிடையாது. சூழல், அனுபவங்கள் ஒருவரை இன்ட்ரோவர்ட் ஆக மாற்றுகிறது. 


பிறகு, அதிலிருந்து வெளியேறுவது என்பது சிரமமாகி விடுகிறது. இன்ட்ரோவர்ட் பற்றி 1920-களுக்கு பிறகே பலருக்கும் தெரிய வருகிறது. உளவியலாளர் கார்ல் ஜங்க் (Carl Jung) என்பவர் மூலம் இன்ட்ரோவர்ட் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது எனலாம். 


இவர் concept of introversion பற்றி 1921 Psychological Types என்ற புத்தம் வெளியிட்டார். ஒருவர் தனிமையை ரசிக்க பழகிக் கொள்வதும் இன்ட்ரோவர்ட் டைப் தான். 

Social introverts, Thinking introverts, Anxious introverts, Inhibited introverts என பல வகைகள் இருப்பதாகவும் சொல்கிறார். இன்ட்ரோவர்ட் நபர்களை பார்த்து பரிதாபமோ, கருணையோ அவசியம் இல்லை. 


இன்ட்ரோவர்ட் தங்கள் உலகில் மகிழ்ச்சியாக இருப்பாங்க என்றும் உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


சிறு வயதில் கண்டிப்பான பெற்றோர்களிடம் வளர்ந்தவர்கள் அல்லது சிறு வயதில் ஏதேனும் சிக்கல்களுக்கு ஆளானவர்கள் பயந்து நாளடைவில் யாரிடமும் பேசாமல் இன்ட்ரோவர்ட் ஆக மாறுவதற்கான வாய்ப்புண்டு. 


இது அவர்களுடைய குணநலன் தானே தவிர குறை அல்ல. பெரும்பாலும் இந்த பண்புகள் ஒருவரின் 18-20 வயதுக்குள் உருவாகி விடும். அதன் பிறகு அதனை மாற்றுவது கடினம் என்கிறார்.

பள்ளத்தில் கவிழ இருந்த பேருந்தை யானை காப்பாற்றியதா?

சிறுவயது தாக்கம் தவிர்த்து ஒருவரின் சமூக காரணங்களும் இன்ட்ரோவர்ட் ஆக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.


இன்ட்ரோவர்ட் நபர்களின் திறன்கள் என்னென்ன?

இன்ட்ரோவர்ட் நபர்களின் திறமைகள் என்னென்ன?

அப்படிப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் நன்றாக படிப்பார்கள், வரைவார்கள். அவர்களிடம் தனித்தன்மைகள் இருக்கும். சிலர் இசை போன்ற துறைகளில் கவனம் செலுத்துவார்கள். 


இதற்கு காரணம் ஒன்று, அவர்கள் பெரும்பாலும் தனியாக நேரம் செலவிடுவதால் அவர்களின் கவனம் ஒரு குறிப்பிட்ட ஒன்றில் அதிகமாக இருக்கும், கற்பனை வளத்துடன் இருப்பார்கள். 


மற்றொரு காரணம், யாரிடமும் பேசாமல் இருக்கும்போது தங்கள் மனதுக்குள் இருப்பதை மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு ஊடகம் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என நினைத்து அவற்றில் ஈடுபடுவார்கள் என்கிறார் கிருபாகர்.

ரெடிமேட் உணவு ஏற்படுத்தும் பாதிப்புகள் !

நமது மூளையில் டோபமின், அசிட்டைல்கலின் என இரண்டு ஹார்மோன்கள் உள்ளன. இதில் டோபமின் புதிய சூழல்கள், புதிய நபர்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வழங்குகிறது. 

மாறாக, இன்ட்ரோவர்ட் மூளைகளில் எந்தவொரு உணர்வையும் கட்டுப்பாட்டுடனும், மிக மெதுவாகவும் அணுகும் வகையிலான அசிட்டைல்கலின் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. 


இதனால், தங்களை ஒருமுகப்படுத்தி ஒன்றில் அவர்களின் கவனத்தை திருப்பும் போது அவர்கள் திறமை யானவர்களாக வர முடியும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings