உங்கள் முகத்தில் Sun Tan இருக்கா? இதை செஞ்சு பாருங்க !

0

என்ன தான் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்க்ரீன், மாஸ்க், என்று போட்டாலும் ஒரு  நேரங்களில் வெயிலில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது முகம், கை பகுதி எல்லாம் கறுத்து விடும். 

உங்கள் முகத்தில் Sun Tan இருக்கா? இதை செஞ்சு பாருங்க !
இதை Sun tan என்று அழைப்பர். இந்த கருமையை நீக்க கிரீம், மருந்து, ஆயிண்ட்மென்ட் எதுவும் பயன்படுத்தத் தேவையில்லை. வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்தே இந்த கருமையை நீக்க முடியும். 


அதற்கான டிப்ஸ் தருகிறோம். அனைவர் வீட்டிலும் உள்ள எளிமையான பொருள் எலுமிச்சை. எலுமிச்சை சாற்றை எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து காய வைத்து கழுவலாம். 

நேரடியாக எலுமிச்சை சாற்றை சருமத்தில் போட வேண்டாம். அதில் உள்ள கடுமையான  சிட்ரிக் அமிலம் சருமத்தை பாதிக்கக் கூடும். இதை ஒரு நாளுக்கு நாலு முறை வீதம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.


தேன் பொதுவாகவே மருத்துவ பண்புகளை நிறைந்தது. அதை இப்படி வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தில் போடும் போது பாதிக்கப்பட்ட செல்களை நீக்கி சருமத்திற்கு புத்துயிர் தரும். 


மேலும் சரும செல்கள் ஈரப்பதத்துடன் இருப்பதற்கும் எரிச்சல், வறட்சி, சிவத்தல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். 

அழகு அமுதம் என்று செல்லப்பெயர் கொண்ட அலோவேராவின் பிரெஷான ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி காய வைத்து கவுமினால் சூரிய ஒளியால் மாறிய கறுமை சீக்கிரம் போகும். 


அது மட்டும் இல்லாமல் சருமம் மிருதுவாக மாறும். புரோபயாடிக், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்த தயிர் சூரிய ஒளியாழ் பாதிக்கப்பட்ட சருமத்தை குளிர்விக்கும். 


சருமத்தை ஆற்றும் மற்றும் நீரேற்றம் செய்யும். அது மட்டும் இல்லாமல் செல்களுக்கு ஊட்டமளித்து உள்ளிருந்து பிரகாசிக்க வைக்கும். தக்காளி இயற்கையான சன்ஸ்கிரீனாக செயல்படும் லைகோபீன் நிறைந்தது. 


இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களுடன் கூடிய பொருளாகும். சிவத்தல், தோல் சேதம் மற்றும் கருமை ஆகியவை விரைவில் குணமாகும். 


தக்காளியை வெட்டி அதை சக்கரை தொட்டு முகத்தில் நேரடியாக தேய்ந்து காய வைத்து கழுவலாம். வெயிலால் ஏற்பட்ட கருமையை நீக்கும் சூப்பர் பொருள் என்னவென்றால் உருளைக்கிழங்கு. 


உருளைக்கிழங்கில் உள்ள கேடகோலேஸ் என்ற நொதி  சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்க உதவுகிறது. உருளைக்கிழங்கை அறைந்து அதன் சாறை முகத்தில் தடவலாம். 

அல்லது நேரடியக உரையை சீவி அதை வைத்து முகத்தை தேய்க்கலாம். பழங்காலத்தில் இருந்தே பப்பாளி சிறந்த அழகு பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப் படுகிறது. பப்பாளியில் பப்பேன் என்ற நொதி உள்ளது. 

இது வெளிப்புற செல் அடுக்கை லேசாக மாற்றி சருமத்தின் அமைப்பை மேம்படுத்துகிறது. சருமத்தின் நிறமிகளை நீக்கி, முகத்தில் உள்ள புள்ளிகளை நீக்குகிறது மற்றும் சருமத்  துளைகளை அடைக்கிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings