காதலர்களான பிரபல நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா ஒரு திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகின்றது.
இதில் பாலிவுட்டின் ஹாட் ஜோடிகளில் ஒருவர்களான விஜய் வர்மா மற்றும் தமன்னா பாட்டியா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தமிழில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா பாட்டியா. தமிழிலில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
மேக்கப் போட வேண்டிய அவசியமே இல்லாத அளவில் நல்ல நிறத்தைக் கொண்ட தமன்னா, யோகாவில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனாலோ என்னவோ தனது உடலமைப்பை கச்சிதமாக பராமரித்து வருகிறார்.
அதுவும் தற்போது தமன்னாவின் ஒரு லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவெனில், சமீபத்தில் பாலிவுட் நடிகரான ரன்தீப் ஹூடாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமன்னா தனது காதலரான நடிகர் விஜய் வர்மாவுடன் கலந்து கொண்டார். தமன்னாவிற்கும், விஜய் வர்மாவிற்கும் 'லஸ்ட் ஸ்டோரி 2' என்ற சீரியஸில் ஒன்றாக நடிக்கும் போது காதல் மலர்ந்தது.
அதில் நடிகர் விஜய் வர்மா கருப்பு நிற கோட்சூட் அணிந்து வந்திருந்தார். நடிகை தமன்னா கருப்பு நிற பூ பிரிண்ட் செய்யப்பட்ட புடவையில் வந்திருந்தார்.
தமன்னா நல்ல பால் போன்ற நிறம் என்பதால், இவர் கருப்பு நிற புடவையை அணிந்ததும், அவரது அழகு இன்னும் அதிகரித்து காணப்பட்டது.
அதுவும் இந்த புடவையை தமன்னா அணிந்து வந்த விதமும், அந்த புடவைக்கு அவர் அணிந்து வந்த டீப் நெக் கொண்ட ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டும் இன்னும் வேற லெவலில் இருந்தது என்றே கூறலாம்.
இது தவிர தமன்னா இந்த புடவைக்கு ஏற்றவாறு கழுத்தில் எந்த ஆபரணமும் அணியாமல், காதுகளில் பெரிய காதணியையும், உதட்டிற்கு அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கையும், முக்கியமாக கொண்டை ஹேர் ஸ்டைலையும் மேற்கொண்டு வந்திருந்தார்.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் வர்மாவும், தமன்னாவும் கைகளைக் கோர்த்து அழகாக பல போஸ்களை கொடுத்ததை தவிர, தமன்னா தனியாக ஒருசில போஸ்களைக் கொடுத்துள்ளார்.
தமன்னாவின் இந்த லேட்டஸ்ட் லுக் தான் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருவதோடு, ட்ரெண்டிங்கிலும் வருவதற்கு காரணமாகவும் உள்ளது.
Trending Since yesterday ❤💘
— Thala Sudharshan (@ThalaSudharsa20) December 12, 2023
Milky Hip Queen #Tamannaah ❣
So Hot #TamannaahBhatia 😘 pic.twitter.com/tR1dmK1vSu
Thanks for Your Comments