சீரியல் நடிகை ஷாலினி தனக்கு விவகாரத்து கிடைத்ததை போட்டோ ஷூட் செய்து கொண்டாடியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து பலரும் அவரை எதிர்மறையாக விமர்சித்து வருகின்றனர்.
ஷாலினிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்த நிலையில் ரியாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஷாலினியின் ரசிகர் என கூறி ரியாஸ் பழகியதாக கூறப்படுகிறது.
பின் இருவரும் காதலிக்க தொடங்கினர். ஷானிலியும் வெளிப்படையாக தாங்கள் காதலிப்பதாக அறிவித்தார். இவரும் திருமணம் செய்து கொண்டு துபாயில் வாழ்ந்து வந்தனர்.
போலி நல்லெண்ணெய் விழிப்புணர்வு
இதற்கிடையில் ஷாலினி அவரது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். அதைக் கொண்டாடும் விதமாக போஸ்ட் டிவோர்ஸ் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அவரின் இந்த புதுமையான போட்டோஷூட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையானது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை விமர்சிக்க தொடங்கி விட்டனர். இதற்கிடையில் அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் கொடுத்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது:
எங்கள் இருவருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. துபாயில் நாங்கள் வசித்தபோது அடிக்கடி சண்டை நடக்கும், அப்போது அவர் என்னை அடித்து துன்புறுத்துவார்.
ரியாஸ் மிகவும் நல்லவர். குடித்தால் மட்டும் இரண்டு மூன்று ஆண்கள் அவருக்குள் வந்து விடுவார்கள். அடித்து துன்புறுத்துவார்.
துபாயில் இருக்கும் போது எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழ் மக்கள் என்னிடம் பழகுவார்கள். அவர்கள் எனக்கு நிறைய அட்வைஸ் கொடுப்பார்கள் எதற்காக இவ்வாறு தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்.
ஆனால் எனக்கு இது இரண்டாவது திருமணம் என்பதால் நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டே போனேன்.
இந்த வாழ்க்கையும் என்னை விட்டுப் போய் விட்டால் சினிமாவில் இருப்பவர்கள் இப்படித் தான் இன்று பெயர் வந்து விடும் என்று அனைத்தையும் பொறுத்து போய்க்கொண்டே இருந்தேன்.
வீட்டு வாடகையாக செக்ஸ் போதும் !
நான் கர்ப்பமாக இருந்தேன், சென்னையில் தான் எனக்கு டெலிவரி ஆனது. அதன் பின்னர் நான் மீண்டும் துபாய்க்கு சென்றேன். அப்போது மகளுக்கு முதல் பிறந்தநாள் துபாயில் கொண்டாடப்பட்டது.
என்னை அடித்துக் கொண்டே இருந்தவர் திருந்தவே இல்லை, மகள் பிறந்த பின்பும் என்னை குழந்தை முன்னால் அடித்தார்.
நான் அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள் தான் விடுத்தேன் மகள் முன்னாடி சண்டை போடக்கூடாது. அவளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று.
நான்கு வருடங்கள் பொறுத்து பொறுத்து போய்க் கொண்டிருந்த நான் அப்போது தான் அவரை திருப்பி அடித்தேன். அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். அதனை தான் நான் போட்டோ ஷூட் எடுத்து கொண்டாடினேன்.
நெய் ஆபத்தானதா? தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கையை கட்டுப் படுத்துபவர் நீங்களாக இருக்க வேண்டும். மோசமான திருமணத்தை விட்டு வெளியேறுவது இயல்பானது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர் என்று நம்புங்கள்.
விவாகரத்து ஒரு போதும் தோல்வியின் அடையாளம் அல்ல. உங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை கொண்டு வர இது திருப்புமுனை என்று ஷாலினி கூறியுள்ளார்.
Thanks for Your Comments