அரிய வகை குதிரை இனம் பற்றிய வைரல் வீடியோ !

0

இணையத்தில் வைரல் வீடியோக்களுக்கு பஞ்சமே இருந்ததில்லை. தினமும் பல்வேறு விதமான வீடியோக்கள் மக்களிடம் பிரபலமடைந்து வருகின்றன. அதுவும் விலங்கு தொடர்பான வீடியோக்களை சொல்லவே வேண்டியதில்லை. 

அரிய வகை குதிரை இனம் பற்றிய வைரல் வீடியோ !
சமீபத்தில் கூட மிகவும் அரிய வகை குதிரை ஒன்றின் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. Akhal-Teke என்ற இனத்தைச் சேர்ந்த இந்த குதிரையின் ரோமங்கள் பொன்னிறமும் வெள்ளியை உருக்கினாற் போன்ற நிறத்தையும் கொண்டுள்ளது.

அகல்-டெக் என்று அழைக்கப்படும் அரிய வகை குதிரை இனம் பற்றிய வைரல் வீடியோ இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்த குதிரையின் ரோமம் தங்க-வெள்ளி போன்று சூரிய ஒளியில் மினுமினுக்கிறது.


துர்க்மெனிஸ்தானில் உள்ள கரகம் பாலைவனத்தில் காணப்படும் இந்த அகல்-டெக் குதிரைகள் அவற்றின் ரோமத்திற்காக கவனம் பெற்று வருகிறது. 

ஒலிம்பிக் சின்னமான ஐந்து வளையங்கள் எப்போது உருவாக்கப் பட்டது?

எக்ஸ் பக்கத்தில் கேப்ரியல் கார்னோவால் பகிரப்பட்ட வீடியோ, அகல்-டெக் குதிரையின் பிரம்மிப்பான தோற்றத்தைக் காட்டுகிறது. இது ஒரு அரிய குதிரை இனம். 


இந்த இனத்தின் பளபளப்பான ரோமத்தின் காரணமாக உலகிலேயே அழகான குதிரைகள் என்ற பெயரை பெற்றுள்ளது.


துர்க்மெனிஸ்தானில் உள்ள கரகம் பாலைவனத்தில் இருந்து தோன்றிய அகால்-டெக் இனமானது அரேபிய குதிரைகளுடன் மூதாதையருக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

அரிய வகை குதிரை இனம் பற்றிய வைரல் வீடியோ !

இந்தக் குதிரைகள் அவற்றின் சுறுசுறுப்பு, அழகு, பட்டுப் போன்ற முடி மற்றும் மெல்லிய உடலமைப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப் படுகின்றன.

தங்கக் குதிரைகள் என்று அழைக்கப்படும் அகல்-டெக் குதிரைகள் இந்தியாவில் 30 லட்சத்தை எட்டும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு குறைவதற்கு காரணம் ?

விசுவாசத்திற்குப் பெயர் பெற்ற இந்த குதிரைகள் அவற்றின் உரிமை யாளர்களை மட்டுமே சவாரி செய்ய அனுமதிக்கின்றன. உலகளவில் இந்த இனம் 7,000 க்கும் குறைவாக உள்ளது.


அகல்-டெக் துர்க்மெனிஸ்தானின் தேசிய விலங்காக அங்கீகரிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings