திருப்பதி என்பது அடிவாரப் பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் உண்மையான பெயர், மனோஹரம் என்பதாகும்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து மட்டும் வெல்லம் உற்பத்தி செய்து, அதனை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள அனகப்பள்ளி கிராமம் தான், திருமலை தேவஸ்தானத்திற்கு வெல்லத்தை பிரசாதமாக வழங்குவதில் பெயர் பெற்றது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் அமடலவலசை மண்டலத்தில் அமைந்துள்ள நிம்மாடா கிராமத்தில், இயற்கை விவசாய முறையில் வெல்லம் உற்பத்தி செய்யப் படுகிறது.
அறுவடை முதல் தயாரிப்பு வரை முழு செயல்முறையிலும் எந்த இரசாயன பயன்பாடும் இல்லை. பொதுவாக பெல்லம் கிராமம் என்று குறிப்பிடப்படும் இந்த இடத்தில் மட்டும் சுமார் 44 விவசாயிகள் கூட்டாக வெல்லம் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.
இந்த ஆண்டு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெல்லத்தை பல சந்தைகளில் விற்பனை செய்யும் முயற்சிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் என்ன தான் இயற்கை விவசாயத்துக்கு பெயர் பெற்றிருந்தாலும், தற்போது 5000 ஏக்கர் மட்டுமே இயற்கை விவசாயத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
மீதமுள்ள 20000 ஏக்கரில் தொடர்ந்து ரசாயன உரம் பயன்படுத்தப் படுகிறது. இயற்கை விவசாயம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 32 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 45 ஆக அதிகரித்துள்ளது.
அது மட்டுமில்லாமல் விளை நிலங்களின் முக்கியத்துவம் குறித்தும், அதை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் மாணவர்களுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
Thanks for Your Comments