ஏரியை வடிவைமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேறத் தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் மடை.
அதனை ஏரியின் அடியாழத்தில் பதித்து, அதன் உள் ஓட்டையில் கோரை, நாணல், களிமண் கலந்து அடைத்து விடுவார்கள். இது தான் ஆரம்பகால மடை. பிற்காலங்களில் பாறைகள், மரச்சட்டங்களால் மடைகள் அமைக்கப்பட்டது.
சொந்த வீடு கட்டுவோர்க்கு முக்கிய யோசனைகள் !
வெள்ளக் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்றே ஆட்கள் இருப்பார்கள். மடையைத் திறப்பது சாதாரண விடயமில்லை. உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கிச் செய்யும் பெரிய சாகசப் பணியாகும்.
மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பை திறந்து விடுவார். ஏரி அல்லது கண்மாயில் இருந்து மடை திறக்கப்பட்டு ஓடை வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும்.
மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடை திறந்தவரையும் இழுத்துச் செல்லும்.
அந்த வேகத்திலிருந்து தப்பி பிழைப்பது மிகவும் கடினம். மடை திறக்க செல்பவர்கள் உயிர் பிழைப்பது அரிது. அவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் அனைவரிடம் பிரியா விடை பெற்றுச் செல்வார்கள்.
குற்றவாளியிடம் குழந்தையை கொடுத்த பெண், பிரீஸரில் அடைத்த காதலன் !
உங்களை யாராவது மடையன் என்று சொன்னால் காலரை உயர்த்தி நான்தான் எனக் கூறுங்கள்...
Thanks for Your Comments