கடந்த 25 ஆண்டுகளாக தனியே வீட்டு வேலைகள் செய்த மனைவிக்கு ரூ.1.75 கோடி நஷ்டயீடு வழங்குமாறு கணவனுக்கு உத்தர விட்டுள்ளது ஸ்பெயின் நாட்டு நீதிமன்றம்.
இந்த நிலை மாறியது. ஆண், பெண் இருவரும் சமம் எனவும், எல்லா வேலைகளையும் எல்லோரும் செய்யலாம் என்ற மனநிலை மக்களுக்கு வந்தது.
எனினும் இன்னும் சில இடங்களில் பெண்கள் வீட்டு வேலைகளுக்கு என்று மட்டுமே என்ற ஒரு வட்டத்திற்குள் சுருக்கப் படுகின்றனர்.
தம் பிரியாணி செய்ய எளிய டிப்ஸ்.. இதை கண்டிப்பா டிரை பண்ணுங்க !
எனது கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னை வீட்டு வேலைகள் மட்டுமே செய்ய வைத்தார், இதற்காகவே என்னை திருமணம் செய்து கொண்டார் என்று புகார் அளித்திருக்கிறார் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர்.
இவானா மொரால் என்ற அந்த பெண்னுக்கு திருமணமாகி இரண்டு தசாபதங்களுக்கு மேல் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள்.
குழந்தைகளை பராமரிப்பதும், கணவருக்கு பணிவிடைகள் செய்வதும், குடும்பத்தை கவனிப்பதும், வீட்டு வேலைகள் அனைத்தும் செய்வதும் தான் இவானாவின் கடந்த 20 ஆண்டுகால வாழ்க்கை.
அவ்வப்போது அவரது கணவர் நடத்தி வந்த உடற்பயிற்சிக் கூடத்தையும் பராமரிக்கும் வேலையும் இந்த பட்டியலில் இடம் பெறும்.
இத்தனை ஆண்டுகளாக வீட்டு வேலைகளை மட்டுமே செய்து வந்ததால், தன்னால் வேறு எதையுமே கையாள முடியாது என்ற எண்ணம் வந்து விட்டதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இவானாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்து வந்த இவானாவுக்கு அவரது முன்னாள் கணவர் ரூ.1.75 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.
Thanks for Your Comments