இப்போது தெலுங்கு நடிகர்கள் தொடங்கி, அம்மாநில முதல்வர் வரை வைரலாகியுள்ள அந்த சாலையோர கடையின் பெயர் குமாரி ஆன்டி கடை. யார் அந்த குமாரி ஆன்டி?
இவ்விடத்தை சுற்றி ஒரு பிஸியான கார்ப்பரேட் வளாகங்களும் ஐ.டி. நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. அதனால் இவருடைய கடையில் எப்பொழுதுமே வாடிக்கையாளர்களின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
குறிப்பாக, ஐ.டி. ஊழியர்கள் மற்றும் கூலி வேலை செய்பவர்களின் மதிய உணவு குமாரி ஆன்டி கடைகே படையெடுக்கின்றனர்.
ஆரம்பத்தில் வழக்கமான சாலையோர உணவகமாக இருந்த இடம் ஒரு இளைஞரின் இன்ஸ்டாகிராம் வீடியோ பதிவால் தற்பொழுது கூட்டம் நிரம்பி வழிகிறது.
காளான் சிக்கன் குழம்பு செய்வது எப்படி?
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு மாறி விட்டது. வழக்கமாக ஒரு சாலையோர உணவகம் என்று எடுத்துக் கொண்டால் இட்லி, தோசை, பூரி, பொங்கல் என்று உணவு வகைகள் இருக்கும்.
ஆனால் ஒரு சாலையோர கடையில் இவ்வளவு உணவு வகைகள் இருக்குமா என்று வியக்கும் அளவிற்கு இவருடைய கடையில் வகை வகையான உணவுகள் உண்டு. 120 ரூபாய்க்கு அன்லிமிட்டெட் நான்- வெஜ் மீல்ஸ்.
மதியம் 12:30 மணி முதல் 3 மணி வரை இவருடைய கடை செயல்படுகிறது. தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் இக்கடையைப் பற்றிய கட்டுரை ஒன்றில், இவருடைய ஒரு நாள் வருமானம் கிட்டதட்ட 30,000 ரூபாய் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
மறுபுறம் இவருடைய கடையில், விலை சற்று அதிகமாக உள்ளது என்று சிலர் கூறி வந்தாலும், டேஸ்ட் தரமாக உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.
இவருடைய கடைக்கு வரும் ஐ.டி. ஊழியர்களால் தான் சாய் குமாரியின் பெயர் குமாரி ஆன்டி என்று மாறி, அவருடைய கடைக்கும் அதே பெயர் வந்து விட்டது.
குமாரி ஆன்டி கடை ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து சினிமா பிரபலங்களும் இவருடைய கடைக்கு வர தொடங்கி விட்டனர்.
ஆனால், இக்கடையின் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையில் விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் கடையை மூடி விட்டு, வேறு இடத்திற்கு மாறும்படி அறிவித்திருந்தனர்.
இந்த செய்தி உடனடியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து பலரும் இந்த உத்தரவிற்கு எதிராக பதிவிட்டு வந்தனர்.
சந்தீப் கிஷன் மற்றும் ராகுல் ரவீந்திரன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் குமாரி ஆன்டி கடைக்கு ஆதரவாக தங்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
வாக்கிங் செய்வது ஏன், எதற்கு செய்ய வேண்டும் !
அதே சமயத்தில் காவல்துறையின் உத்தரவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
இந்த பிரச்சனைக்கு அடிப்படை காரணம் ஃபுட் ப்ளாக்கர்ஸ் (Food Bloggers) தான், என்று ஒருவரும், குமாரி ஆன்டி கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள்,
தங்கள் விருப்பத்திற்கேற்ப வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர், என்று மற்றொரு நபரும் தங்கள் சமூக வலைதள பக்கமான ரெட்டிட்-ல் பதிவிட்டுள்ளனர்.
இந்த செய்தி வைரல் ஆனதை தொடர்ந்து, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் போக்குவரத்து துறை டிஜிபி-க்கு உத்தர விட்டுள்ளார்.
இதுகுறித்து தெலுங்கானாவின் மக்கள் தொடர்பு துறை அதிகாரி அயோத்யா ரெட்டி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், காங்கிரஸ் அரசு என்றும் ஏழைகளுக்கு ஆதரவாக இருக்கும். தொழில் முனைவோர்களுக்கு என்றும் அரசாங்கத்தின் ஆதரவு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானா முதல்வரின் இந்த முடிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் சந்தீப் கிஷன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் விஜயானந்த், எங்களுக்கு சாலையோர கடைகளை அகற்ற வேண்டும், அவர்களின் வருமானத்திற்கு இடையூறு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
மொறுமொறுப்பான சிக்கன் லெக் ப்ரை செய்வது !
ஆனால், இங்குள்ள சாலையோர வியாபாரிகள் தாங்கள் செலுத்த வேண்டிய வாடகை தொகையை செலுத்தாமல் இருக்கின்றனர்.
நீதிமன்றத்திலிருந்து சட்டப்படியான அறிவிப்பு வந்த பிறகு, நாங்கள் அங்குள்ள கடைகளை அகற்றுவோம் என்று கூறியுள்ளார்.
Thanks for Your Comments